ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பான் கீ மூன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூன் தனது பயணத்தின் ஒரு கட்டமாக இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
Author: admin
துருக்கியின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீற்றர் கிழக்கே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட அண்மித்த நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை மூன்றாவது முறையாக இன்று கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் இன்று (06) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த மாதம் 25ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் அரசியலமைப்பு பேரவை கூடிய போது, பேரவையின் ஆணைக்குழு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டனில் இருந்து நானுஓயா நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்று நேற்று (05) மாலை தடம்புரண்டுள்ளது. குறித்த ரயில் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையிலான பகுதியில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய சித்தியின் சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியாத 11 வயதான சிறுமியொருவர், சுமார் 5 கிலோமீற்றர் தூரம் தனியே நடந்து சென்று, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று ஹொரவப்பொத்தானையில் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தாய், இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டார். அதன்பின்னர், அச்சிறுமியின் தந்தை, பிள்ளையொன்று இருக்கும் விதவை மறுமணம் செய்துகொண்டுள்ளார். தன்னுடைய சித்தி, அவளுடைய பிள்ளையை அன்பாக கவனிப்பதாகவும், தன்னை ஏசி, அடித்து துன்புறுத்துவதாகவும் சிறுமி செய்துள்ள முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துன்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமலேயே ஐந்து கிலோமீற்றர் தூரத்தை நடந்தே வந்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் அச்சிறுமி, தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 41 வயதான சித்தியை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முற்சியால் நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (05) முதல் அனுமதி வழங்கப்பட்டது. உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்துக்கு பக்தர்கள் சென்றுவர ஆரம்ப காலங்களில் அனுமதி கொடுக்கப்பட்டு வந்த போதிலும் பின்னர் பாதுகாப்பு விடயங்களை காரணம் காட்டி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த தமது பூர்வீக ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிணங்க பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுமக்கள் பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் இந்துக்களின் சிறப்பு நாளான தைப்பூச தினமான இன்று ஆலயத்திற்கு பக்கத்ரகள் செல்வதற்க அனுமதி கொடுக்கப்பட்டதற்கு இணங்க தைப்பூச வழிபாடுகள் மற்றும் சிறப்பு பொங்கல் நிகழ்வுகளை பொதுமக்கள்…
மருதானையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துடன், முதற்கட்ட அறிக்கை ஆணைக்குழுவிடம் இன்று (06) கையளிக்கப்படவுள்ளது. 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு அதிக தொகை செலவிடப்பட்டதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை (03) இரவு மருதானையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மற்றொரு குழுவினர் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸாரால், நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று சம்பவ இடத்துக்கு விஜயம் செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்த முதற்கட்ட அறிக்கை இன்று (06) ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் தொடரும் என்றும் ஆணைக்குழு…
தலங்கம பிரதேசத்தில் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் கொலை சம்பவம் தொடர்பில் கந்தானையை சேர்ந்த 22 வயதான இளைஞன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து வீட்டின் உரிமையாளரான வர்த்தகரின் சடலம் கடந்த 02 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது. உயிரிழந்தவர் பிரபல ஆடையகம் ஒன்றின் உரிமையாளரான, தொழிலதிபர் அந்த வீட்டிற்குச் செல்வதாக தனது சகோதரியிடம் கூறிவிட்டு கடந்த மாதம் 31 ஆம் திகதி சென்றுள்ளார். அவர் மீண்டும் திரும்பவில்லை. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவரது சடலம் நீச்சல் தடாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.
நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர நிதி கோரியுள்ளார். அமைச்சருக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், சில கப்பல்களுக்கு நிலுவை மற்றும் முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான நிலக்கரி ஏற்றுமதியை இலங்கை பெற முடிந்தது என்றும் நிலக்கரி கெள்வனவுக்கு 456 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் அமைச்சருக்கு அறிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் 5 கப்பல்கள் நாட்டுக்கு வருகை தந்ததாகவும் இந்த மாதத்தில் சுமார் ஐந்து முதல் ஏழு நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்கு வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் இந்த மாதத்துக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான நிலக்கரி கையிருப்பு தமது…
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்திக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும், அனல் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறையாலும் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. அத்துடன், நாளை இரண்டு மணித்தியாலங்களுக்கு மாத்திரம் மின்வெட்டை மட்டுப்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், நீர் மின் நிலையங்களைச் சூழ பதிவாகும் மழை வீழ்ச்சியின் காரணமாக மின்சார முகாமைத்துவ நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.