புத்தல – வெல்லவாய பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பெலவத்தையில் உள்ள சீனி தொழிற்சாலைக்கு அருகில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் தெரிவித்துள்ளார். அதன்படி, சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அதிர்வு உணரப்பட்டதாக சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோளில், 3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைந்துள்ள நான்கு நிலநடுக்க மையங்களிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன், நிலநடுக்கம் தொடர்பாக மேலும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது இலங்கையில் ஏற்பட்ட அதிர்வு என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Author: admin
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வெல்லவாய, புத்தல மற்றும் ஹந்தபானகல பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமி அதிர்வினால் எந்தவித பாதிப்பும் இல்லை மக்கள் அச்சமடைய தேவையில்லை என கூறப்பட்டது.
நூற்றாண்டின் பேரழிவு என விபரிக்கப்படும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. எனினும், மீட்பு பணிகள் தொடருவதால் பேரழிவின் முழு அளவு இன்னும் தெளிவாக இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிபாடுகளில் இருந்து தப்பியவர்களைத் தேடி வருகின்றனர், ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணிநேரம் ஆகியுள்ளதால் அதன் நம்பிக்கை குறைந்து வருகின்றது. உறைபனி நிலைமைகள் ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன, அவர்கள் இப்போது தங்குமிடம், தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். இதனிடையே, அடிப்படைக் கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உடனடி நிதியுதவி அடங்களாக உலக வங்கி, துருக்கிக்கு 1.78 பில்லியன் டொலர்கள் உதவியை வழங்கியுள்ளது. ஆனால், 100,000 அல்லது அதற்கு மேற்பட்ட மீட்புப் பணியாளர்களின் முயற்சிகள் வாகனப் பற்றாக்குறை மற்றும் பாழடைந்த வீதிகள் உள்ளிட்ட பல தளவாடத் தடைகளால் தடைபட்டு வருகின்றன.
பெண்களுக்கு அலைபேசி அழைப்பு மேற்கொண்டு ஏமாற்றி பணம் மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கடந்த 8ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேகநபர் பெண்களுக்கு அலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், ஆபாசமான தகவல் மற்றும் காணொளிகளை அனுப்பியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம், மாத்தறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியக அதிகாரிகள், நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபரின் அலைபேசி மற்றும் வங்கிப் பதிவுகள் தொடர்பான தகவலின் ஊடாக சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மஹியங்கனை, அரவத்தை பிரதேசத்தில் 12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேகநபரான சிறுவன் மஹியங்கனை, ஒருபெந்திவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி கற்கும் மாணவன் என்பதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி அதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 07 இல் கல்வி பயிலும் மாணவி ஆவார். சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அயலவர் எனவும், அவர் வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹியங்கனை பொலிஸாரால் 14 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (9) மடுல்சீமை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, இன்று பகல் 12.30 மணிவரை சஜித்தின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், பகல் 12.30 மணியளவில் மேடையேறிய ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியதுடன், இந்த பிரசாரத்துக்கு வருகைத் தந்த எதிர்கட்சித் தலைவர் பசறை- கெக்கிரிவத்த பகுதியில் வைத்து திடீர் சுகயீனமடைந்து கொழும்பு திரும்பிவிட்டதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் தாம் ஒரு நாள் சம்பளமான 1,000 ரூபாயை இழந்து இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட போதிலும் எதிர்கட்சித் தலைவர் தம்மை ஏமாற்றிவிட்டதாக கூச்சலிட்டுள்ளனர். இந்த கூட்டத்துக்கு வருகைத் தந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இந்த விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர், பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பருப்பு 10 ரூபாவாலும், வெள்ளை அரிசி 5 ரூபாவாலும், சிவப்பு அரிசி 5 ரூபாவாலும், வெள்ளை நாட்டு அரிசி 4 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பருப்பு 305 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளை அரிசி 179 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 180 ரூபாய்க்கும், ஒரு கிலோ சிவப்பு அரிசி 164 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியை உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்துவரும் நிலையில் ஆசிரியை தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராமசேவகர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு யன்னல்கள் உடைந்துள்ளதுடன் மண்டபத்தில் ஆசிரியர் உருக்குலைந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தடயவியல் மற்றும் குற்றதடுப்பு…