இன்று மீண்டும் துருக்கி சிரியா எல்லையில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
Author: admin
நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் 18 சதவீதமானவை சுகாதாரமற்றவை என்றும் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகளை அவை வழங்குவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இலங்கையில் 55 சதவீத உணவகங்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் 27 சதவீதம் திருப்திகரமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
திருமணத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டி, பூஜைகளை மேற்கொள்ளவந்த யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, பூஜை செய்யும் பரிகாரி ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இன்று (20) தீர்ப்பளித்தார். 10 வருடங்களுக்கு முன்னர் இந்தக் குற்றத்தை பிரதிவாதி செய்ததற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லையென்றாலும், சட்டப்பூர்வ மனைவியை வற்புறுத்துவது சட்டத்தின் முன் குற்றம் என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி பிரதிவாதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்டுள்ளதால் மேற்படி தண்டனை வழங்கியுள்ளார். அவரை. கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வீட்டுக்குள் பூஜைகளை செய்துவரும், சனூன் பதுர் மொஹமட் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் யுவதி ஒருவரை அவரது அனுமதியின்றி வன்புணர்ச்சி செய்ததாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பாக…
ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதியம் மற்றும் பணியாளர்கள் தொடர்பான பிரச்சினையால் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.. வேலைநிறுத்தத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஜி.எம்.பி.தொழிற்சங்கத்தின் 11,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் யுனைட் யூனியனின் சில உறுப்பினர்களும் ஈடுபடுகின்றனர். ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சார்பாக பேசிய ஜி.எம்.பி. தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் ரேச்சல் ஹாரிசன், ‘அரசாங்கம் எந்தவொரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அவர்கள் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் ஊதியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுக்கின்றார்கள். அர்ப்பணிப்புள்ள சுகாதாரப் பணியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறும் அலைகளைத் தடுக்கப் போகிறோம் என்றால், ஊதியப் பிரச்சினையைத் தீர்ப்பது இன்றியமையாதது’ என கூறினார்.
அடுத்த கல்வியாண்டில் ஒவ்வொரு ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கும், 130 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான இலவச பாடசாலை உணவு உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான், அறிவித்துள்ளார். 2023-24 கல்வியாண்டில் தலைநகரில் உள்ள 270,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் நிதி உதவியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு சுமார் 440 பவுண்டுகள குடும்பங்களுக்கு சேமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் செய்தியை வரவேற்றுள்ளன, ஆனால் கூடுதல் நடவடிக்கை தேவை என்று கூறுகின்றன. உள்ளூர் சபை வரி மற்றும் தலைநகரின் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வரும் வணிக வீதங்கள் மேயரின் வரைவு வரவு செலவு திட்டங்களில் முதலில் கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதால், திட்டத்திற்கான நிதி சாத்தியமாகியுள்ளது. தென்மேற்கு லண்டனில் உள்ள டூட்டிங்கில் உள்ள தனது பழைய பாடசாலையான ஃபிர்கிராஃப்ட் பிரைமரிக்கு விஜயம் செய்யும் போது கான் அதிகாரப்பூர்வமாக…
அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று முதல் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர அலுவல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான கடிதம் அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாிகள் மற்றும் அனைத்து மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களையும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களில் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால் அதற்கு தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் முன்அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் அலுவலக நேரத்திற்குப் பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும்…
நோர்டன்பிரிஜ் பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் பின்னர் பஸ்ஸிற்கு கீழ் சிக்குண்டு, உயிரிழந்த இளைஞன் ஒருவனின் சடலத்தை லக்ஷபான இராணுவ முகாம் அதிகாரிகள் மீண்டும் கண்டெடுத்துள்ளனர். 33 வயதான இளைஞன் ஒருவனின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை யாத்திரை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த பஸ், நோர்டன் பிரிஜ் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நேற்றைய தினம் இரண்டு பெண்கள் உயிரிழந்திருந்ததுடன், 26 பேர் காயமடைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் தகவல் பதிவாகியிருந்தது. இதையடுத்து, இன்று காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே, இளைஞன் ஒருவன் சடலத்தை இராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி, சரண குணவர்தனவை 30,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் திகதி எடுத்துக் கொள்ளவும் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும்போது, தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான மூன்று வாதங்களை அவர் முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்.
பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உதையால் கரு அழிந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார். இந்த கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகமடைந்த இராணுவ வீரர், தன்னையும் தாக்கியதாகவும், கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் பலமுறை உதைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். உதைக்கப்பட்ட கர்ப்பிணி தரையில் வீழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.கர்ப்பிணிப் பெண்ணை உதைத்ததாகக் கூறப்படும் கடற்படைச் சிப்பாய் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதுடன் அவர் புல்முடே பிரதேசத்தில் உள்ள முகாமில்…
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உத்திகள் குறித்த விவாதிக்க தயார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்து விவாதத்தில் தன்னோடு நேருக்கு நேர் கலந்துகொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அவர் சவால் விடுத்துள்ளார். சாத்தியமான தீர்வுகளைப் பற்றி விவாதிக்க இரு கட்சிகளும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப 2000, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி பல செயற்திட்டங்களை வெளியிட்டது என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாரம்பரிய அரசியல் பற்றி பேசி சேறு பூசுவதை நிறுத்தி, பொருளாதார கொள்கைகள் குறித்த வெளிப்படையான விவாதத்திற்கு வருமாறு அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இருவரும் இறுதியாக 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது அமெரிக்காவில் நடைபெறுவதை போன்று நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.