அரசாங்கத்தினால் தம்மால் முன்வைக்கப்பட்ட 08 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு நாடளாவிய ரீதியில் 30 தொழிற்சங்கங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Author: admin
இறக்குமதி செய்யும் முட்டைக்கான விசேட பண்ட வரி 1ரூபாயாக குறைப்பு இந்த நடைமுறை பெப்ரவரி 21 முதல் அமுலாகும். அத்துடன் 3 மாதங்களுக்கு மட்டுமே அமுலில் இருக்கும். இந்த வரி 50 ரூபாயாக இருந்தமை குறிப்பிடத்தக்கது
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீன எல்லையில் இருந்து தஜிகிஸ்தான் நோக்கி 82 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தான் கல்வி பயின்ற பாடசாலையான ரோயல் கல்லூரிக்கு இன்று (22) விஜயம் செய்த ஜனாதிபதி, தனது பாடசாலை கழுத்துப் பட்டியை அணிந்திருந்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழ்.வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன் மணல் பகுதியில் யாழ்.மாநகர சபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை நிறுவுவதற்காக யாழ்ப்பாண மாநகர சபையுடன் ஒரு உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டு அது செயற்படுத்த தயாராக இருந்த நிலையில் மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் குறித்த கோம்பயன் மணல் இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்ட அனுமதிக்க முடியாது என குறித்த விடயம் தடைப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது லொறிகளில் ஏற்றப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தல மற்றும் வெல்லவாய பிரதேசங்களுக்கு அண்மித்த பகுதிகளில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் அகழ்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த போதிலும் மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவை வெளியிடுவதை மார்ச் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
பனாமுர பொலிஸ்நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பனாமுர தொடம்வத்த பகுதியில் நேற்று (21)முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 26,635 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் இதிகாட்டிய மற்றும் முள்எட்டியாவல பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 50 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்றைய தினம் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், கொட்டதெனியாவ, மத்தியதலாவ, களுஅகல பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் இயக்குபவர் என பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்பக் கோளாறினால் நிறுத்தப்பட்ட இயந்திரத்தை பரிசோதித்த போது, இயந்திரம் மீண்டும் இயங்கியதால், காயங்கள் ஏற்பட்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் 37 வயதுடையவர். சம்பவம் தொடர்பாக கொட்டதெனியாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.