வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபாய் வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் இன்று (11) முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் காசோலைகளை கையளிக்கும் அடையாள நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. கடந்த 33 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகள் மீளக் கிடைத்ததையிட்டு ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்தனர். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வட மாகாணத்துக்கான…
Author: admin
கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. அன்றைய நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்படுவதால், மாணவிகள் மீது பகிடிவதைகள் மற்றும் வேண்டத்தகாத ஒழுங்கீன சம்பவங்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டி பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் விடுக்கும் வேண்டுகோள்களை கவனத்தில் கொண்டே இவ்வறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக கெளரவ மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் தெரிவித்தார். ஆகையினால் அன்றைய தினம் எந்தவொரு டியூட்டரியையும் திறக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம். இதனை கண்காணித்து, உறுதி செய்யுமாறு மாநகர சபையின் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் தங்களது பிள்ளைகளை டியூசனுக்கு அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கற்பிட்டி – கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் டொல்பின்கள் நேற்றிரவு முதல் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். வழமைக்கு மாறாக நேற்றிரவு டொல்பின் ஒன்று கரையொதுங்கியதை அவதானித்த மீனவர் ஒருவர் இதுபற்றி ஏனைய மீனவர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், கடற்படையினருக்கும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் , கடற்படையினரும், பொலிஸாரும் அந்த இடத்திற்கு சென்ற போது, அங்கு 15 இற்கும் மேற்பட்ட டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டனர். இதனையடுத்து, கரையொதுங்கிய டொல்பின் மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியுடன் கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இவ்வாறு கரையொதுங்கிய டொல்பின்களில் மூன்று டொல்பின்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும் கைதான இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் – கொழும்பு வீதியில் வசிக்கும் சந்தேக நபர், வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்படுகின்றார் என இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதனையடுத்து விசேட அதிரடிப்படைக்கு இவ்விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டு, சந்தேக நபரை கைது செய்வதற்கு கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலம்புரி சங்கை வாங்குவதற்காக செல்லும் பாணியிலேயே சந்தேக நபர்கள் இருவரையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரதான சந்தேக நபரின் வீட்டிலேயே வலம்புரி சங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது எனவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும் கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார். இலங்கையில் இருந்து 1,000 மைல்களுக்கு அப்பால் இத்தகைய நடுக்கம் ஏற்படுவதால் அதன் தாக்கம் குறைவாகவே இருப்பதாக பேராசிரியர் தெரிவித்தார். இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்கள் ஏற்கனவே இரண்டாகப் பிளவுபடத் தொடங்கியிருப்பதாகவும், கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் இது நிகழும் விகிதம் அதிகரித்திருப்பதாகவும் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியப் பெருங்கடலை உலுக்கிய சமீபத்திய பாரிய நிலநடுக்கங்களும் பூமியின் மேற்பரப்புக்குள் ஒரு புதிய தட்டு எல்லையை உருவாக்குவதற்கான சமீபத்திய படியை சமிக்ஞை செய்துள்ளன.
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு முன்னர் வடக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கியது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அந்த பலமான பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், பொருளாதார அபிவிருத்தியம் அவசியம் என்றும் கூறியுள்ளார். மேலும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம் மக்களின் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பில் தங்கியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எண்ணமே நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மையற்ற நிலையை தோற்றுவித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தம் குறித்து மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள் காட்டி, சி.வி.விக்னேஸ்வரன் பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார். அகிம்சை என்பது இந்து, பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் முக்கிய கோட்பாடு எனவும், ஒரு பகுதி மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விடயத்தை தேரர்களால் எவ்வாறு போதிக்க முடியும் எனவும் சி.வி. விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரர்களிடம் வினவியுள்ளார். அத்துடன், வடக்கு, கிழக்கில் 3000 வருடங்களுக்கும் மேலாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் புராதன வரலாற்றை உத்தியோகபூர்வமாக எழுதுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் இந்திய மற்றும் சர்வதேச வரலாற்றாசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதியை கோருமாறும் மகாநாயக்க தேரர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலை மாணவர்களினால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று (சனிக்கிழமை) யாழ். பல்கலை கழகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன் போது போராட்டத்தின் முன்னதாக பல்கலை வளாகத்தினுள் உள்ள பிரதான கொடி கம்பத்தில் கறுப்பு கொடியினை மாணவர்கள் ஏற்றியும் இருந்தனர். குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவில் இரண்டாவது தடவையாக சுதந்திர தினத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏன்? எனவும் கேள்வி எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2022 ஜனவரியில் 259.2 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணம் 2023 ஜனவரியில் 437.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. 2022 ஜனவரியில் காணப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 68.8% அதிகரிப்பு என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விபச்சாரத்திற்கு அனுமதி உண்டு எனக் கூறி வெளிநாட்டு பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவரை சிறுவர் மற்றும் மகளிர் பணியக குழுவினர் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இந்த பெண்களை வரவழைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி லட்சக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் பணியகம் குறிப்பிடுகிறது. சந்தேக நபர்கள் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வெள்ளவத்தையில் உள்ள வீட்டில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அவர்களால் அழைக்கப்பட்ட கென்ய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 300 அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படையில் தான் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு மணி நேரத்திற்கு 120 டாலர்கள் வரை தான் விற்கப்பட்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளதாக கூறியதால், வாக்குறுதி அளித்த தொகை கூட வழங்கப்படவில்லை எனவும், அதனை நம்பியதாகவும்…