பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு படுகொலை முயற்சி என்றும், இம்ரானின் ஆரதவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Author: admin
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள மஜலெங்காவைச் சேர்ந்த. 61 வயதான கான் இதுவரை 87 திருமணங்கள் செய்து உள்ளார். கான் தனது 14 வயதில் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார், அவருடைய தந்போதைய மனைவி அவரை விட இரண்டு வயது மூத்தவராவார், பலமுறை திருமணம் செய்துகொண்ட கானுக்கு ‘பிளேபாய் கிங்’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. தற்போது கான் 88 வது முறையாக திருமணம் செய்து உள்ளார். அதுவும் விவகாரத்து செய்த தனது முதல் மனைவியை. மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார் இது குறித்து கான் தெரிவிக்கையில், எங்களுக்கிடையிலான காதல் இன்னும் வலுவாக உள்ளது. எனது முன்னாள் மனைவி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னை அணுகியபோது என்னால் மறுக்க முடியவில்லை. நாங்கள் பிரிந்து நீண்ட நாட்களாகிவிட்டாலும், எங்களுக்கு இடையேயான காதல் இன்னும் வலுவாக உள்ளது. எங்களது திருமணம் ஒரு மாதமே நீடித்தது. அப்போது எனது மோசமான அணுகுமுறை…
எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் எரிபொருளுக்கான முன்பதிவுகளை வழங்காததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியன தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு இருப்புக்களை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். எனவே, விநியோகஸ்தர்கள் தங்கள் தேவைகளுக்கு முன்பதிவுகளை செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
லங்கா சதொச விற்பனையகங்களில் முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த கையில், குறித்த புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு, வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா கோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு – புதிய விலை 279 ரூபா உள்நாட்டு டின் மீன் 105 ரூபா குறைப்பு – புதிய விலை 585 ரூபா தாய்லாந்து நெத்தலி 1kg 200 ரூபா குறைப்பு – புதிய விலை 1,300 ரூபா சிவப்பு பருப்பு 1kg 17 ரூபா குறைப்பு – புதிய விலை 398 ரூபா
ஜப்பானில் Hirokazu Tanaka என்ற பெயருடன் கூடிய 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம், இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதில், 3 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை வயது வரம்பின்றி பலரும் கலந்துள்ளனர். Hirokazu Tanaka என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர். இதற்கு முன்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு Martha Stewarts என்ற பெயருடைய 164 நபர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கூடியிருந்தது தான் சாதனையாக இருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசுபிக் பொருளாதார சமூக ஆணையத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய அலுவலகத்தின் தலைவர் மிகிகோ தனகா தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிய அளவிலான பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பச் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறிய அவர், தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். சமகால அரசியல் விடயங்கள் குறித்து அண்மையில் கல்முனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; இந்த நாட்டில் மத்திய அரசுடன் முழுமையாக இருந்து நிர்வாகம் செய்ய முடியாது என்பதற்காகவே 1948ஆம் ஆண்டு தொடக்கம் சமஷ்டி தீர்வின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வின் ஊடாக வடக்கு, கிழக்கில் ஒரு தனியான நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் சமூகம் கோரி வருகின்றது. அதற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.…
மட்டக்களப்பு இரத்த வங்கியில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குருதியை நன்கொடையாக வழங்க விரும்புவோர் எந்த குருதி வகைகளைச் சேர்ந்த நபர்களாக இருந்தாலும் மட்டக்களப்பு இரத்த வங்கிப் பிரிவுக்கு வருகை தந்து தங்களது இரத்தங்களை தானமாக வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் இரத்த வங்கி பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. 0652226116 0757004300
வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள இடையூறுகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பதிவாளர் நாயகத்திற்கு இன்று (02) பணிப்புரை விடுத்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சுற்றறிக்கையை உடனடியாக இரத்து செய்யுமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இன்று (02) காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார் என்று அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்யவேண்டும் எனின், அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் வலிதான பாதுகாப்பு அறிக்கையை பதிவாளர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்து பாதுகாப்பு அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தைக் கொண்டே திருமணத்தை…
இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், புகைப்பிடிப்பவர்களில் 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து விலகுவார்கள் என தாம் நம்புவதாக அந்த சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையங்களில் சிகரெட் சில்லறை விலைக்கு உள்ளதே அவர்களுக்கு அதிலிருந்து விடுபட தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.