தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று(புதன்கிழமை) எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளன. நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவளித்து 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எனினும் குழந்தைகள், மகப்பேறு மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனத்தினரும் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். நீர், மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று…
Author: admin
துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள அகோர பூகம்பம் குறித்து கொழும்பிலுள்ள துருக்கிய தூதுவர் திருமதி ரகிபே டெமத் செக்ரா இக்லுவுடன் தொடர்பு கொண்டு வினவினேன். மீட்பு பணிகள் தொடர்கின்றன இறந்தவர்களது விபரங்கள் எத்தனை என்று கூற முடியாதுள்ளது என்றார். எங்கள் நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தியுங்கள் என எம்மால் என்ன செய்ய முடியும் எனக் கேட்ட போது தூதுவர் தெரிவித்தார்அதுவேநீங்கள் செய்யும் உதவி என்றார்.துருக்கிய மக்களுக்காகப் பிரார்த்திப்போம்.
உள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அம்பாறை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள ரின்மீன் உற்பத்தித்தொழிற்சாலையை தனியார் முதலீட்டாளர் ஊடாக புனரமைத்து மீண்டும் இயங்கச் செய்து உற்பத்தியை அதிகரிக்கவும், இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும் எடுக்கப்பட்ட தொடர் முயற்சியின் பெறுபேறாக இன்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தனியார் கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே குறித்த ஒப்பந்தம் அமைச்சில் கைச்சாத்தானமை குறிப்பிடத்தக்கது.
பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர், பொது மன்னிப்பு வழங்கியமையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுக்கள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர, அர்ஜுன ஒபேசேகர ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பொது மன்னிப்பு வழங்குவதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நடைமுறைகளை பின்பற்றிவில்லை என்றும் வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான இந்த மாத அடிப்படைச் செலவுகளுக்கு 77 கோடி ரூபாயை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் உரிய பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட நிதியை வழங்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா நிதி அமைச்சிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அடிப்படைச் செலவுகளுக்கு குறித்த தொகை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும் ஒரே தடவையாகவோ அல்லது தவணை முறையிலோ குறித்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவரது கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலின் போது அடிப்படை கடமைகளை ஆற்றும் அரசாங்க அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முற்பணமாக செலுத்துவதற்காகவே இந்தத் தொகை கோரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் ஆணைக்குழுவிடம் தேர்தல் செலவுக்காக 4 கோடி ரூபாயை நிதி அமைச்சு வழங்கியுள்ள நிலையில், முழு நடவடிக்கைகளுக்காக 400 கோடி…
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தமானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகமும் பொதுச்சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனச் சபையின் தலைவருமான பான் கி மூன் ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கமும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனமும் பசுமை வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் குறித்த திட்டங்களை திறம்பட வடிவமைப்பதற்கு ஏதுவாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என தான் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். மேலும் அவரது புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பசுமை வளர்ச்சிப் பாதைக்கான இலங்கையின் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு இறுதியாக வருகை தந்தத்துக்கு பின்னர் கடந்த ஆறரை ஆண்டுகளில் ஏற்பட்ட அந்த மாற்றங்கள் தான் அறிவேன் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நேற்று நாட்டை வந்தடைந்த பான் கீ மூன் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கியில் கானா தேசிய கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியன் அட்சு காணாமல் போனதாக கூறப்படுகிறது. 31 வயதான – அவர் முன்பு நியூகேஸில் யுனைடெட், எவர்டன் மற்றும் போர்டோ ஆகியவற்றுடன் விளையாடியவர் – செப்டம்பர் முதல் துருக்கிய சூப்பர் லீக்கில் அன்டாக்யாவில் உள்ள ஹேடாய்ஸ்போர் அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை தி ஸ்டார் ஆஃப் தி சவுதின் ஹீரோவாக அட்சு இருந்தார், காசிம்பாசாவை 1-0 என்ற கணக்கில் 97வது நிமிடத்தில் கோல் அடித்தார். அட்சு ஐந்து ஆண்டுகள் கழித்த நியூகேஸில் யுனைடெட் ட்வீட் செய்தது: “சில நேர்மறையான செய்திகளுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொள்திறனை அபிவிருத்தி செய்வதற்கான இரு நாள் பயிற்சி பாசறை இன்று (திங்கட்கிழமை) திகதி மட்டக்களப்பில் உள்ள தொழில் வழிகாட்டல் நிலையத்தின் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இலங்கை தொழில் வழிகாட்டல் நிலையத்தின் மாவட்ட மனித வள இணைப்பாளர் டபிள்யு.கொலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் கலந்து கொண்டதுடன் சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் (ஓய்வூ பெற்ற) ஆர்.ஜீ. வீரசிங்க வளவாளராக செயற்பட்டார். எமது மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடையவர்களை வலுப்படுத்தி அவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அவர்களை தொழில் துறையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பாக இச் செயலமர்வு இடம்பெற்றது. இச் செயலமர்வில் போது கருத்து தெரிவித்த உதவி மாவட்ட செயலாளர் இப்பயிற்சி நெறியில்…