எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய அதிக வாய்ப்பு உள்ளதாக தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். அதன்படி தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு, 24 கரட் 1 கிராம் 23,760 ரூபாய் 24 கரட் 8 கிராம் (1 பவுன்) 190,100 ரூபாய் 22 கரட் 1 கிராம் 21,780 ரூபாய் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) 174,250 ரூபாய் 21 கரட் 1 கிராம் 20,790 ரூபாய் 21 கரட் 8 கிராம் (1 பவுன்) 166,350 ரூபாய்
Author: admin
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர். எரிபொருளின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், QR முறைப்படி, ஒரு வாரத்திற்கு தேவையான அளவு எரிபொருளை பெறுவதற்கு கூட நுகர்வோர் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அவர்கள் கூறினர்.
———- (எம்.என்.எம்.அப்ராஸ்) அம்பாரை மாவட்டம் கல்முனை வலயக் கல்வி பிரிவில் உள்ள கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட நீர் இணைப்புத்தொகுதி ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டிலும்,வை.டப்ளியு.எம்.ஏ(YWMA) அமைப்பின் அனுசரணையிலும் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (2023/2/14)இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு குடிநீர் இணைப்புத்தொகுதியினை திறந்து வைத்தார். இதில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. எஸ்.ஜே.ஏ.கபூர்,பகுதித்தலைவர்களான எம்.ரி.ஏ.மனாப்,டி.கே.எம்.மௌஸீன்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள்,பெற்றார்கள், ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். அத்துடன் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன் மேலும் நிகழ்வின் நினைவாக மர நடுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது கல்வியின் முக்கியத்துவம் கருதி 1987ஆம்…
சிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சிம்பாவேக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்த தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில் 2 ஆவது இறுதியுமான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கி முதல் இன்னிங்சிற்காக 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 292 ஓட்டங்களை பெற, 177 ஓட்டங்கள் பின்னிலையொடு 2 ஆவது இன்னிங்ஸிற்காக சிம்பாவே அணி களமிறங்கியது. இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் 173 ஓட்டங்களுடன் சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது.
145 போதை மாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் பதுளை மைலகஸ்தன்னவில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் யுவதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபரின் காரும் போதைப்பொருளும் பதுளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய வைத்தியர் இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வெலிபென்னவில் 34 வயதுடைய நபரை நேற்றிரவு ஹெல்மெட் அணிந்துகொண்டு கொலைசெய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால பொருளாதார திட்டம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இது தொடர்பிலான நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்றது. கடன்பொறியில் இருந்து விடுபட்டு, நிலையான அபிவிருத்தியை நோக்கி செல்லும் விதம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தமது எதிர்கால பொருளாதாரத் திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான 10 விடயங்கள் தொடர்பில் இதில் விபரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல், கடன் நெருக்கடி முகாமைத்துவம், பணவியல் மற்றும் மாற்று விகிதக் கொள்கை, வருமான ஒருங்கிணைப்பு, செலவினக் கட்டுப்பாடு, வர்த்தகம், தொழில், விவசாயம் மற்றும் சேவைகள் மேம்பாடு. அரச துறை முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல். ஆற்றல் மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தம், சந்தை பொருளாதார சீர்திருத்தம், வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. அதனூடாக தற்போதைய சிக்கல் நிலையை தீர்க்க முடியும் என தாம் நம்புவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பெரும்போக நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட செயலாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரும்போக நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோ கிராம் 88 ரூபாவிற்கும் உலர்த்தப்பட்ட நெல் ஒரு கிலோ கிராம் 100 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால், பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.