உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தமது ஆணைக்குழுவால் கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, இருதரப்பும் இன்று (வியாழக்கிழமை) இதுதொடர்பில் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையும் என்றும் எதிர்வரும் சில நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி தபால் வாக்குச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Author: admin
வெலிகமவில் பத்து வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்வி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை துஷ்பிரயோகம் செய்ததுடன், சந்தேக நபர்கள் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனது பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்து தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து, தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இருபது வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் புதன்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். துஷ்பிரயோகத்துக்கு ஆளான மாணவி, பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டதன் பின்னர் செயலாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மின் கட்டமைப்பை உருவாக்கி, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இந்தியாவிற்கு விற்க முடியும் என இலங்கை நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், 04 நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியுமென அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன், உள்ளூராட்சி மன்தை் தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிறுவனத்திற்கு தேவையான பாதுகாப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இனி மின்சாரக்கட்டணம் 20% – 60% அதிகரிக்கின்றது 30 அலகு – Rs 440 60 அலகு – Rs 1060 90அலகு – Rs 2400 120அலகு – Rs 8300 180அலகு – Rs 12800 300அலகு – Rs 30300
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்த நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என்று தெரிவித்தார். தேசிய நீர் கொள்கைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் மகாவலி அதிகார சபையில் அண்மையில் நடைபெற்ற போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, நீர்வழங்கல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனை வழங்கினார். இதன்போது, தேசிய நீர் கொள்கையொன்றை உருவாக்குவதற்கு உரிய தரப்பினருக்கு பொறுப்புக்களையும் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும், பஸ்னாகொட நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கத் திட்டம் ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீர்வழங்கல் அமைச்சின்…
பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நான்கு உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜூன் 28 சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவே இணைத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வவிசாரணை இன்று ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றத்திற்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நியூசிலாந்து நாட்டில் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணியளவில் ரிக்டர் அளவில் 6.1ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை
மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதமாக அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இலங்கை மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில், 66% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டதுடன், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அதன் உறுப்பினர்கள் பலர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.