QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெற்றோல் அடிக்குமாறு கோரியுள்ளனர். ஊழியர் QR குறியீட்டை கேட்ட போது, QR இல்லாமல் அடிக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்த போது, ஊழியருடன் முரண்பட்டு, தமது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து ஊழியர் மீது சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Author: admin
சுமார் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க நாட்டின் முன்னணி உள்நாட்டு விமான நிறுவனங்கள், ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு பின்னர், எயார் இந்தியா நிறுவனம், 470 விமானங்களை வாங்க எயார் பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதேபோல் இண்டிகோ நிறுவனம், சுமார் 500 விமானங்களை வாங்கவுள்ள நிலையில், ஆகாசா, கோ பர்ஸ்ட், விஸ்டாரா உட்பட ஒட்டுமொத்த நிறுவனங்களும் சுமார் 1,115 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கமைய, அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவிற்கு 2,210 புதிய விமானங்கள் தேவைப்படுமென போயிங் நிறுவனம் கணித்துள்ளது.
நாட்டில் தற்போது ராஜபக்ஷ நிழல் அரசாங்கமே ஆட்சி செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி, அக்குரணையில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை பாண்டிருப்பு 2ல் வாழ்ந்த புலம்பெயர் உறவுகளின் அனுசரனையில் பாண்டிருப்பு 2ல் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின் கட்டிடத்தில் சக்தி தையல் ஆடைத் தொழிலகம் சமய நிகழ்வுடன் திறந்து கைக்கப்பட்டது. சக்தி ஆடைத் தொழிலகத்தின் இணைப்புச் செயலாளர் சீ.ரவிகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசய ராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இத் தொழிலகத்தை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தினி யோகேஸ்வரன், விஷேட அதிதியாக சுவிற்சர்லாந்தின் புலம்பெயர் உறவுகளின் பிரதிநிதியும், இந்நிகழ்வுக்கு அனுசரனை வழங்கியவர்களின் ஒருங்கிணைப்பாளருமான இ.விஜயகுமாரன் மற்றும் அதிதிகளாக ஶ்ரீ அரசடியம்மன், ஶ்ரீ சித்தி விநாயகர் ஶ்ரீ வடபத்திர காளியம்மன் கோவில் தலைவர் சி.சண்முநாதன், ஶ்ரீ மகாவிஷ்ணு ஆலய தலைவர் ஆ.செல்லத்துரை, பாண்டிருப்பு 2B கிராம சேவகர் கே.வேதநாயகம் உட்பட மாதர் சங்கத்தினரும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது, அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி இந்த தனிப்பட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட முதலாம் வகுப்பு மாணவர்களுக்கும், இன்னுமொரு குழுவுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில், 9 மாணவர்கள் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்தே முதலாம் வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய வீட்டுவசதி மற்றும் விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், கலந்து கொண்டதாக கொரியா மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) தெரிவித்துள்ளது. ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உணவு நிலைமை குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்த சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் பியாங்யாங்கின் புறநகரில் ஒரு பெரிய பசுமை இல்ல பண்ணையை கட்டுவதற்கான நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து, பியோங்யாங்கின் ஹ்வாசோங் மாவட்டத்தில் 10,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான இரண்டாம் கட்ட கட்டுமானத் திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் விழாவிலும் கிம் கலந்துகொண்டார். இந்தத் திட்டம் 2025ஆம் ஆண்டு வரை இயங்கும். இது ஐந்தாண்டு தேசிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலைநகரில் 50,000 புதிய வீடுகளை வழங்குவதற்கான பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாகும். வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், ஒரு இரகசிய நாட்டை…
இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிச்சாலை உணவுப்பொருட்களின் விலைகனை அதிகரிப்பதற்கு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது உணவுப்பொதி கொத்து ப்ரைட் ரைஸ் ஆகியன நூற்றுக்கு 10 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் மின்கட்டண அதிகரிப்புக்குஅமையவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அந்நாட்டின் மஸ்பதே தீவை மையமாகக் கொண்டு அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளான லெகாஸ்பி நகர், வடக்கு சமார், லுசான் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுகத்தை அடுத்து அங்கு மக்கள் உஷார் நிலையில் உள்ளனர். நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தில் இருந்து சர்வதேச சமூக மீண்டு வர முடியாமல் தவித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் பதிவானது பீதியை ஏற்படுத்தியுள்ளது. ´பசிபிக் ரிங் ஆஃப் பயர்´ என்று அழைக்கப்படும் நிலநடுக்க அச்சுறுதல் அதிகம் காணப்படும் பூகோள அமைப்பில் பிலிப்பைன்ஸ் நாடு…
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை கல்வி வலயத்தின் கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்கவினால் கடந்தவாரம் நியமிக்கப்பட்டு கடந்த 2023.02.13ல் கல்முனை முஸ்லிம் கோட்டக்கல்வி பணிமனையில் வைத்து முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம். ஸம்ஸம் அவர்களிடமிருந்து தமது கடமைகளை பெறுப்பேற்று கொண்டார். கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி எம்.என்.எம். மலிக் ஆகியோர் முன்னிலையில் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தனது கடமைகளை பெறுப்பேற்று கொண்டார். கல்முனை கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட உதவிக்கல்வி பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிவரும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான நஸ்மியா சனூஸ் அப்பதவிக்கு மேலதிகமாகவே இந்த கோட்டக்கல்வி அதிகாரி பதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அர்ப்பணிப்புடன் கடந்த…