இலங்கையில் உள்ள பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், இரசாயனங்கள் பற்றாக்குறையால் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இது தொடர்பில் தங்களுக்கு அறிவித்துள்ளதாக கூட்டணியின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை தீவிரமடையும், இதுவரை சந்திக்காத அளவு நோயாளிகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஒரு முக்கியமான கட்டத்தில் சுகாதாரத் துறையை நிறுத்தும் என்று அவர் கூறினார். இதேவேளை, நாட்டிலுள்ள நிலைமை நீடித்தால் அடுத்து வரும் நாட்கள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
நாளை (13) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். 💠 *ABCDEFGHIJKL ▪️ PQRSTUVW* 📌 *மு.ப. 8.00 – பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்கள்* 📌 *பி.ப. 6.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்* 💠 *MNO | XYZ* 📌 *மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்* 💠 *CC* 📌 *மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்.* 💠 *ABCDEFGHIJKL* *முதலாம் கட்டம்* 📌08:00 AM -11:20 AM ➖ A, B, C, D 📌11:20 AM -…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பல நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறி இன்று அனுப்பப்பட்ட கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் எழுதியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்ததை எதிர்க்கட்சித் தலைவர் நிராகரித்தமையினால் ஜனாதிபதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஊரடங்குச் சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை (13) மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் டுவிட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், “ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். பிரதமராக அவர் நியமனதும் , அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தின் விரைவான உருவாக்கம் ஆகியவை நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படிகளாகும். னைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் IMF மற்றும் நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“கோட்டா கோ கம” போராட்டம் அப்படியே தொடர வேண்டும் என்று கூறிய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தலையிடாது என்றும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டவுள்ளதாகவும், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து உருவாக்கும் சதியை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்ததாக கூறப்படும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் மீட்பர் என்றும், விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது மக்களின் விருப்பம் அல்ல என்றும் எம்பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து முன்மொழிந்த ஒன்றை நாட்டில் யார் நம்புவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “ரணில் கோத்தபய ராஜபக்சவை நம்புகிறார், பிந்தையவர் ரணிலை நம்புகிறார். அவர்களின் சதிக்கு இந்த நாட்டில் உள்ள எந்தவொரு பிரஜையும் இம்முறை வீழ்ந்துவிடமாட்டார்” என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 25 ஆவது பிரதமராக ரணில் விக்கிமரசிங்க சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதேவேளை, ரணில் விக்கிமரசிங்க 6 ஆவது முறையாகவும் பிரதமராகப் பதவிப் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் தீடிரென ஏற்பட்ட கடற்கொந்தலிப்பு காரணமாக கடல் நீர் உட்புகுந்ததால் கல்முனை விவசாய விரிவாகல் பிரிவில் பயிரிடப்பட்ட உளுந்து,நிலக்கடலை என்பன பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ‘சௌபாக்கியா’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர் செய்கையை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின் வழிகாட்டலில்,கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரிவுக்குட்பட்ட கல்முனை அன்பு சகோதர இல்லத்தில் சுமார் நான்கு ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம்(10) தீடிரென ஏற்பட்ட கடற்கொந்தலிப்பு காரணமாக கடல் நீர் உட்புகுந்ததால் சுமார் அரை ஏக்கரில் பயிரிடப்பட்ட நிலக்கடலை பயிர் பாதிப்படைந்ததாக விவசாயி எஸ்.நல்லதம்பி தெரிவித்தார். இந் நிலையில் குறித்த கல்முனை அன்பு சகோதர இல்லத்திற்க்கு சொந்தமான மற்றுமொறு நிலப்பரப்பில் சுமார் ஒன்றரை ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து செய்கைக்குள்ளும் கடல் நீர் உட் புகுந்த நிலையில் முற்றாக உளுந்து பயிர் பாதிப்படைந்ததாக விவசாயி கே.கிருபாகரன்…
கடந்ந திங்கட்கிழமை இடம் பெற்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை தனக்கோ தனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை எனவும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.