கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த மீனகயா ரயிலின் கழிவறையில் சிசுவை கைவிட்டுச் சென்ற தாய் மற்றும் தந்தையை எதிர்வரும் 17ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, புதன்கிழமை (15) உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை (10) பிளாஸ்டிக் கூடையொன்றில் சிசுவை வைத்து, ரயில் கழிவறையில் விட்டுச் சென்ற தாய் தந்தை ஆகியோர் கொழும்பில் இருந்து பண்டாரவளை, கொஸ்லந்த வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். கொஸ்லந்த மீரியபெத்தயில் வசிக்கும் 26 வயதான தந்தை மற்றும் பண்டாரவளை நாயபெத்த தோட்டத்தில் வசிக்கும் 25 வயதான தாய், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, பண்டாரவளை பதில் நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் புதன்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பதில் நீதவான், அன்றைய தினத்தில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் கட்டளையிட்டார். அதற்கமைய கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிசுவின் தாய் மற்றும் தந்தையின்…
Author: admin
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை என சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று (15) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பல தொழிற்சங்கங்களால், புதன்கிழமை (15) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை நிறுத்துவதற்கு அராங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை (14) இரவு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், அரசாங்கத்தினால் எந்தவொரு தீர்வும் வழங்கப்படாமையால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. வரிகளைக் குறைத்தல் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரிகளை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர். அதன்போது, பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படும் என்றும், அதற்கான பதிலுடன் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தற்போதைய மற்றும் இன்று (14) புதன்கிழமையன்று முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தையும் கைவிடத் தயாராக இல்லை என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை முதல் தபால் ஊழியர்கள்…
பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி, இன்று (14) இரவு 6.05க்கு புறப்படவிருந்த இரவு தபால் ரயில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. கோட்டையில் இருந்து பதுளையை நோக்கி இன்றிரவு 8.30க்கு புறப்படவிருந்த ரயிலின் சாரதி இன்மையால், அந்த சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே பதுளை –கோட்டை ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதியை தாக்கிய ஃப்ரெடி சூறாவளியால், மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சில வாரங்களில் இரண்டாவது முறையாக தாக்கிய ஃப்ரெடி சூறாவளியால் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் பலத்த மழைக் காரணமாக, ஒரே இரவில் வீடுகள் மற்றும் உறங்கிக் கொண்டிருந்தவர்கள், மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பாதிப்பைச் சந்தித்த மலாவியில் இதன்போது, குறைந்தது 99 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 134 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 16 பேர் காணாமல் போயுள்ளனர். மலாவியின் வணிகத் தலைநகரான பிளான்டைரில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். ‘எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று பேரிடர் மேலாண்மை விவகாரத் துறையின் ஆணையர் சார்லஸ் கலெம்பா தெரிவித்தார். அண்டை நாடான மொசாம்பிக்கில், குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். புயலின் இரண்டாவது நிலச்சரிவின் பாதிப்பு எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாக மொசாம்பிக் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்…
அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான அரச வைத்தியசாலைகளை இனங்காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குழுவொன்றை நியமித்துள்ளார். சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொலவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், வைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை, லைசியம் கெம்பஸ் மற்றும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மருத்துவ மாணவர்களுக்காக போதனா வைத்தியசாலையாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற அரச வைத்தியசாலைகள், ஆய்வு செய்தல், மீளாய்வு செய்தல், இனங்காணல் மற்றும் மருத்துவப் பயிற்சியை வழங்குவதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் என்பன தொடர்பில் இக்குழு ஆராயவுள்ளது. இதன்படி, இனங்காணப்படும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு (08) வாரங்களுக்குள் குழுவின் இணங்கானல்…
திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.
அரச பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 341 நிலையங்களில் இதற்கான பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பரீட்சை திணைக்களம் ஏற்கனவே எடுத்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மாகாண அடிப்படையில் உருவாகும் வெற்றிடங்களுக்கு மாகாண சபைகள் வருடாந்தம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.