யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் எச்சரித்துள்ளார். யாழ்.உரும்பராய் ஞானவைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யாழ்.தீவகத்தில் பல பாடசாலைகள் போதியளவு மாணவர் இன்மையால் மூடப்பட்டுள்ள அதேவேளை வலிகாமம் கிழக்கில் இரண்டு பாடசாலைகள் அண்மையில் மூடப்பட்டன. பாடசாலைகளை மூடுவதற்கு மாணவர்கள் இல்லாமையே காரணமெனக் கூறப்பட்டாலும் யாழ். மாவட்டத்தில் பல தனியார் பாடசாலைகள் முளைத்த வண்ணமுள்ளன. யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்ந்த உரும்பிராய் இந்துக் கல்லூரி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற பல…
Author: admin
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் TikTok இல் “எல்லோரும் எனக்கு எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்” என்ற வாசகத்துடன் பாடலுடன் அவரது படங்களைக் காட்டும் பதிவு ஒன்று வைரலாகி வருகின்றது.
யாழ். விக்ரோறியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றி முதலாவது பரிசினை வென்றுள்ளார். யாழ். விக்ரோறியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் எஸ். சிவகுமார் தலைமையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது. இதன்போது விளையாட்டு போட்டியில் பழைய மாணவர்களிற்கான ஓட்டப்பந்தய நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றியுள்ளனர். இதன்போது ஓட்டப்பந்தயத்தில் குறித்த பாடசாலையில் படித்த 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு அதற்கான முதல் பரிசினை தட்டிச்சென்றுள்ளார். இவ்வாறு சாதனை படைக்க வயது எந்த தடையும் இல்லை என்பதினையும் நிரூபித்து காட்டிய மூதாட்டி புனிதவதியை பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கொட்டகலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தவறியமையை கண்டித்து கொட்டகலை நகர வர்த்தகர்கள் இன்று (06) சில மணிநேரம் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கொட்டகலை நகரில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொட்டகலையில் உள்ள எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவின் உதவி கிடைக்கவில்லை அத்துடன் ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவும் உதவவில்ல் என குற்றஞ்சாட்டியுள்ள கொட்டகல நகர வர்த்தகர் சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் புஸ்பா, அதனை கண்டித்தும் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.
தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் தனது இரண்டு மாற்றுத் திறனாளி மகன்களுடன் தாயொருவர் கிணற்றில் குதித்துள்ள சம்பவம் கெபத்திகொல்லாவ கணுகஹவெவ பிரதேசத்தில் நேற்று (05) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்ற மகனும் தாயும் கவலைக்கிடமான நிலையில் கெபதிகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெபதிகொல்லாவ கணுகஹவெவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சுனில் சாந்தகே ரவிந்து மிஹிரங்க என்ற 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் குறித்த இளைஞரின் 48 வயதான தாயும் ஒன்பது வயதுடைய மகனும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த குறித்த இளைஞர் முற்றாக ஊனமுற்றவர் என்றும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய சகோதரன் காது கேளாதவர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக மாற்றுத்திறன் கொண்ட இரு பிள்ளைகளுக்கும் தேவையான மருத்துவ வசதிகளை செய்ய முடியாததால் குறித்த பெண் தற்கொலை செய்ய கிணற்றில்…
இங்கிலாந்தில் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறவிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கையை ஐக்கிய தொழிற்சங்கம் இடைநிறுத்தியுள்ளது. யூனிசன் மற்றும் ஜிஎம்பி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நிலையில் ‘பெரிய மாற்றம்’ என்று கூறியதை அடுத்து, இது வந்துள்ளது. யுனைட் மூன்று ஆம்புலன்ஸ் தொழிற்சங்கங்களில் மிகச் சிறியது. இது சுமார் 3,000 தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கிலாந்தின் பெரிய பகுதிகளில் வெளிநடப்பு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேற்கு மிட்லாண்ட்ஸ், நார்த் வெஸ்ட், சவுத் ஈஸ்ட் மற்றும் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளில் உள்ள ஐக்கிய உறுப்பினர்கள் திங்களன்று வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டிருந்தனர். யோர்க்ஷயரில் உள்ள ஊழியர்கள் புதன்கிழமை அவர்களுடன் சேர திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. யுனைட் நடவடிக்கைகளின் தலைவர் கெயில் கார்ட்மெயில் இதுகுறித்து கூறுகையில், ‘வார இறுதியில் அரசாங்கத்தின் மேலும் உறுதிமொழிகளைத் தொடர்ந்து யுனைட்…
எதிர்வரும் மார்ச் 19 அல்லது அதற்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு, எதிர்க்கட்சிள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கையொப்பத்துடன் கடிதமொன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். தேர்தலை நடத்துவதற்கு இருந்த ஓரேயொரு தடையை உயர் நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளதால், எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும், இது சம்பந்தமாக திறைசேரி செயலாளருடனோ வேறு எவருடனுமோ நீங்கள் கலந்துரையாடத் தேவையில்லை என அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி முன்னதாக, தேர்தலை நடத்கூடிய திகதியை தாமதமின்றி நியமிக்குமாம் தேர்தலை ஆணைக்குழு உறுப்பினர்களை,…
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளதாக குித்த சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, ஒரு கிலோ சீனியின் மொத்த விற்பனை விலை 17 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் மேலும் குறையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்
கொட்டகலை நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 09.30 மணியளவில் ஏற்பட்டது. திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டடத்தில் அமையப்பெற்றுள்ள தளபாட கடை மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. திம்புள்ள- பத்தனை பொலிஸார், பிரதேசவாசிகள், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர், கொட்டகலை இராணுவத்தினர், இராணுவத்தின் தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 4 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்பு படையினர் விரைந்து வந்திருந்தால் இந்த பாரிய அனர்த்தத்தை கட்டுப்படுத்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன. கொட்டகலை…
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தல் முறையை மாற்றுவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் மோசமான முறையில் தலையீடு செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டியதில்லை என குறிப்பிட்ட அவர், தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், அதனால் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இதன் மூலம் ஏற்படப்போவதில்லை என தெளிவுப்படுத்தினார்.