கம்பளை – ஹெம்மாதகம வீதியில் பயணித்த கார் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் அவுஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஹெம்மாதகம நோக்கி செல்லும் வீதியின் பலத்கமுவ பகுதியில் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 12 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. விபத்தில் காரின் சாரதியும் இரண்டு அவுஸ்திரேலிய பெண்களும் காயமடைந்துள்ளதுடன், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 67 வயதுடைய அவுஸ்திரேலிய பெண் எனவும், சாரதி உறங்கியமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
Author: admin
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை உள்ளடக்கிய ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வீதி விபத்துக்களால் 14 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வாகன சாரதிகளை அவதானமாக செயற்படுமாறும், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
துருக்கி நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கிலோமீற்றர் தென்மேற்கே இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதில் துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தொடர்ந்து ரிக்டரில் 7.5 அளவிலான மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதில் சிக்கி இரு நாடுகளிலும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (16) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஏறக்குறைய 26 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாகனங்களுக்கு இடையில் இடைவெளி விடாமல் சென்றமையே இந்த விபத்திற்கு காரணம் என நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் வாகனங்கள் சேதம் அடைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
*24CT* *Rs 177,000* *22CT* *Rs 162,200* *21CT* *Rs 154,900* *18CT* *Rs 132,800*
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்றும்(17) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் திரு.நிலான் மிராண்டா தெரிவித்தார். இதேவேளை, நேற்று சுமார் 30 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் சேவைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, இன்று(17) அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட தூர பயண சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களின் பின்னர் மூன்று கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர். இந்த மூன்று தொற்றாளர்களும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூன்று கொவிட் தொற்றாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கான 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 7 லீற்றராகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், கார்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும், லொரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றராகவும், வேன்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட கோட்டா மதிப்புகள் அதே முறையில் பராமரிக்கப்படுமா அல்லது முந்தைய மதிப்புகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 2ஆம் திகதி ஏற்படவுள்ளது. ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஏப்ரல் 20ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. முற்பகல் 9.46க்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையை அடையவுள்ளது. தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பகுதி கிரகணம் தென்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் முழு சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும். எவ்வாறாயினும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் பங்களாதேஷுக்கு செலுத்த வேண்டும்.