சப்ரகமுவ, மேல், மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பிரதான நகரங்களுக்கான வானிலை அறிவித்தல் • அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை. • மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை. • கொழும்பு – பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்…
Author: admin
கல்முனை கல்வி வலய கமு/கமு இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் கத்தார் வாழ் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகளுக்கான அமையத்தின் இப்தார் நிகழ்வும், பொதுக் கூட்டமும் கத்தார் முன்தஸா பூங்கா வெளியில் மௌலவி ஏ.பீ.எம்.றிணோஸ் (ஹாமி) அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடல் கடந்து வாழும் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டதுடன் நிருவாகப் பொறுப்புகளும் அதன் வகிபாகங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் எம்.டீ.எம். இஜாஸ் அவர்களினால் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகளுக்கான அமையத்தின் நோக்கம் பற்றி விவரிக்கப்பட்டது. அதன் பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகளுக்கான அமையத்தின் தற்காலிக நிருவாகமொன்றை தெரிவுசெய்ய வேண்டும் என எச்.எம்.பஸ்மீர் முன்மொழிந்தமையை அடுத்து…
அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5 இடங்களில் இருந்து ‘செனஹசே யாத்திரை’ (பாசத்திற்காக யாத்திரை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் இந்த பாசத்திற்காக யாத்திரை எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டையே ஆட்டிப்படைக்கும் வகையில் பல உண்மைகள் வெளியாகும் எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இனவாத நடவடிக்கைகள் என்பவற்றின் பின்னணி தொடர்பிலும் இதன்போது வெளியாகும் என அவர் தெரிவித்திருந்தார். நாம் 21ம் திகதி கொழும்பை ஆக்கிரமிப்போம் எனவும் எதிர்க்கட்சி எப்போதும் பலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (15) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். சரியான பதவி உயர்வு முறைமை இல்லாமை, சமுர்த்தி அதிகாரிகளுக்கு பயணக் கொடுப்பனவுகளும் அலுவலகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சமுர்த்தி தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதான செயலாளர் டபிள்யூ. ஜோதிரத்ன தெரிவித்துள்ளார். சமுர்த்தி அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது பேச யாரும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா புகை குண்டுகளால் தாக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வகாயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (15) இடம்பெற்ற தாக்குதலில் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தில் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உரையாற்றத் தயாராகிக் கொண்டிருந்த போதே இந்த வெடிகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இருபது முதல் முப்பத்தேழு வயதுக்கு இடைப்பட்ட நபர் ஒருவரை ஜப்பானிய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலம் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை நெருக்கடியைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் இந்தியா எப்போதும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உயர்மட்ட சந்திப்பில் கலந்து கொண்டபோது, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகளில் அனைத்து கடன் வழங்குநர்களையும் கையாள்வதில் வெளிப்படைத்தன்மையும், சமத்துவத்தை உறுதிப்படுத்த கடன் வழங் குநர்களுக்கிடையில் ஒத்துழைப்பும் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார். பொருளாதார நெருக்கடியை கையாள இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கு வதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு கடன்களை வழங்கிய தனியார் கடனாளிகளின் குழு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவை இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் பத்திரங்களின் மதிப்பு 12 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு பரிஸ் கிளப்பின் கடன் வழங்குநர்கள் தயாராகி வரும் வேளையில் இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (15ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. (வளிமண்டளவியல் திணைக்களம்)