புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவியேற்றுள்ளனர் அந்தவகையில்: 1. தினேஷ் குணவர்த்தன – பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் 2. ஜிஎல் பீரிஸ் – வெளிநாட்டு விவகாரம். 3. பிரசன்னா ரணதுங்க – நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி 4. காஞ்சனா விஜேசேகர – எரிசக்தி மற்றும் மின்வலு என்றவாரு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சபைத் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாகவும், பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Author: admin
👉SSC (தற்போதைய OL பரீட்சை ) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம். 👉 HSC (தற்போதைய AL பரீட்சை) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம் – ரணில் விக்ரமசிங்க 👉கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக் குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர். 👉இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர். 👉ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர். 👉15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர். 👉ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர். 👉இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர். 👉 உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “ பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி. 👉1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர். 👉இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர் 👉இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை…
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகள் இருவரை அழைப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற கலவரத்தில் சட்டத்தை நிலைநாட்டத் தவறியமை தொடர்பில் ஆராய்வதற்காக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (13) ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார். தொடர் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் இருவரை அழைத்து வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவினுடைய மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில், அவர் அங்குகூடிய மக்களில் ஏற்படுத்திய கடுமையான தாக்குதலினால் காரணமாக ஏற்பட்ட காயங்களினால் வெளியாகிய இரத்த போக்கு நிலைமையினால் தான் பாராளுமன்ற உறுப்பினர் இறந்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இலங்கையில் ஏற்பட்டிருந்த குழப்பங்களின்போது போது நிட்டம்புவவில் பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையதினைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கட்டிடமொன்றில் தஞ்சம் புகுந்திருந்ததுடன். பின்னர் பொதுமக்களினால் கட்டிடத்தை சுற்றி வளைத்த காரணத்தினால் அவர் தனது சொந்த துப்பாக்கியினால் தற்கொலை செய்து கொண்டதாக திடுக்கிடும்தகவலொன்று வெளியாகியிருந்தது. மேற்க்கூறிய பொலனறுவை மாவட்டத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினரின் இறப்பு தொடர்பாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியினுடைய (ஜேஎம்ஓ) பிரேத பரிசோதனையின் போது உறுப்பினர் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களின் அதிக இரத்தப்போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர் பாரிய தாக்குதலுக்கு உள்ளானதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில்…
Smart Phone இல்லாத கைகளே இல்லை. Smart Phone பயன்படுத்தும் நாம் அனைவரும் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சினை Phone Hang (பயன்படுத்திட்டு இருக்கும் பொது அப்படியே நின்று விடும்) ஆகுதல் மற்றும் அதிகமாக சூடாகுதல். இதுவே எமக்கு ஒரு பெரிய தலையிடியாக இருக்கும். இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் கீழே பார்ப்போம். 1. Memory Card (மெமரி கார்ட்) Smart Phone சூடாகுவதற்கும் இடையே ஹேங் ஆவதற்கும் முதல் காரணமே இந்த Memory Card தான்… தற்போது வெளியாகின்ற Smart Phone கள் போதியளவு Storage (சேமிப்பு திறன்) உடன் வருவதால், Memory Card பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளலாம். 2. Charge (சார்ஜ்) போட்டுக் கொண்டே மொபைல் போன் பயன்படுத்துவது. Charging Function நடந்துகொண்டிருக்கும் போது நாம் Phone ஐ பயன்படுத்துகின்றோம் என்றால். அங்கு Phone இன் Usage அதிகமாவதால், Phone இன் Battery க்கும் ஆபத்து Phone ற்கும் ஆபத்து அதிகம்.…
சமகி ஜன பலவேகயவை புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் எரிசக்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த ஒரு வாரக்காலமாக கொழும்புக்கு அப்பால் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் பணம் செலுத்தத் தவறியதன் காரணமாகவே இந்த மசகு எண்ணெய் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது. *குறித்த கப்பலுக்கான பணத்தொகையை செலுத்தினால் எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினை ஓரளவுக்கு தணியும் என்று நம்பப்படுகிறது.* இதனையடுத்து அதனை விடுவிப்பதற்கான டொலர்களை திரட்டும் நடவடிக்கையில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (14) முதல் பல நீண்ட தூர புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் காரணமாக பல புகையிரதங்கள் சேவைகள் ஈடுபடுத்த முடியாமல் போனதான புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அது ஒருபோதும் நடக்காது என பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் சிதைந்துவிட்டது. இந்நிலையில், மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த விடயங்களை சரிசெய்து மீண்டும் நாட்டை வழமைக்கு கொண்டு வருவேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க நேற்று முன் தினம் இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். எனினும், அவரது நியமனம் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது, ஏனெனில் அவர் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் ராஜபக்ச குடும்பத்திற்கு…
இலங்கைக்கு உடனடியாக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த யூரியா தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.