பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மனைவியான 3 பிள்ளைகளின் தாயொருவர் தனது கணவனின் நண்பனான பொலிஸ் கான்ஸ்டபிளிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கோரி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (5) தனது கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். படுகாயமடைந்த நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளார். அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிளுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பனின் 38 வயதுடைய மனைவியுடன் அவருக்கு உறவு ஏற்பட்டது. நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட நட்பு நெருக்கமாகவே, திடீரென பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார். அங்கு அவரைத்…
Author: admin
பெண்களின் சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்தக்கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் , முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், அத்தியாவசிய மருந்துவகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழி வகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும், சுகாதார உரிமை எமது உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வறுமையான குடும்பங்களுக்கு பணம் பெற்றுத்தருவதாக கூறி, முன்னணி வைத்தியசாலைகளுக்கு சிறுநீரகங்களை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் பணம் வழங்காமை தொடர்பில் ஐவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 15 – கஜீமா வத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் டீசல் விலை குறைப்பு தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன, அது பேருந்து கட்டணங்களில் தாக்கம் செலுத்தக் கூடிய அளவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.. ஒரு லீற்றர் டீசலின் விலை 35 முதல் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(5) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி 3ஆம் பிரிவில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார். இவ்வாறு கைதான நபர் ஆரையம்பதியை பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து பல கோடி பெறுதியான வலம்புரி சங்கு ஒன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட…
எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. முக்கியமாக கிழக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கில், ஒடேசா மின்சாரம் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த இந்த ஏவுகணை தாக்குதல்கள், முந்தைய சந்தர்ப்பங்களில் இருந்ததை விட குறைவான சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ரஷ்யா வீசிய 70 ஏவுகணைகளில் 60 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், திட்டமிடப்பட்ட 17 இலக்குகளையும் தாக்கியதாக ரஷ்யா கூறுகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதல்கள், அண்டை நாடான மால்டோவாவில் மின்சார விநியோகத்தை பாதித்துள்ளதாக, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்குள் இரண்டு விமானத் தளங்களில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான வெடிப்பு சம்பவங்களுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு உக்ரைன் மீதான இந்த தாக்குதல்…
கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், ரவுண்ட்-16 சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று குரேஷியா மற்றும் பிரேஸில் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. அல் ஜனோப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், குரேஷியா அணியும் ஜப்பான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில், குரேஷியா அணி, 3-1 என்ற பெனால்டி சூட்-அவுட் முறையில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ராஸ் அபு அபவுத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பிரேஸில் அணியும் தென்கொரியா அணியும் மோதின. இப்போட்டியில், பிரேஸில் அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. எதிர்வரும் 9ஆம் திகதி எடிவுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில், குரேஷியா அணியும் பிரேஸில் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மெனிக்பாமிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை சீரமைத்து காவலாளியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்றையதினம் இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்த நிலையிலே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. குறித்த கடவையில் நான்கு, ஐந்து விபத்து சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன் அண்மையில் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், குறித்த கடவையினூடாக பாதுகாப்பற்ற போக்குவரத்தை தாம் மேற்கொண்டு வருவதாகவும், அத்தோடு புகையிரதம் சீரான நேரத்தில் வருகை தராததால் எந்த நேரத்தில் புகையிரதம் வரும் என்று தெரியாத நிலையிலே குறித்த பாதையினூடாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். புகையிரத கடவையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7500 ரூபா மாத்திரமே ஊதியமாக வழங்கப்படுவதால் யாரும் குறித்த பணிக்கு செல்ல விரும்புவதில்லை என குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். குறித்த போராட்ட இடத்திற்கு வருகை…
ஈரான் அரசாங்கம் இந்த ஆண்டு(2022) 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை கைது செய்த ஈரான் பொலிஸார், அவரை கடுமையாக தாக்கினர். பொலிஸார் தாக்கியதில் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈரான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு ஈரானில் இதுவரை குறைந்தது 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று நோர்வேயை தளமாகக் கொண்ட…
தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் தற்போது மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களை விரைவில் கரைக்கு அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு பயணிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மன்னார் முதல் காங்கேசன்துறை வரை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தெற்கு அந்தமான் தீவு கடற்பகுதி மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கமானது இன்று(06) தாழமுக்கமாக வலுவடைவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி எதிர்வரும் 08 ஆம் திகதி தமிழகக் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.