இலங்கை எதிர்கொண்டுவரும் நெருக்கடி நிலைமைகளை வெற்றிகொள்ள சகல கட்சிகளினதும், மக்களினதும், சிவில் பிரதிநிதிகளினதும் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்பதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதன் மூலமாகவே சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்று (15) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்கள் குறித்தும், பிரதான எதிர்க்கட்சியின் பொது வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது இலங்கை எதிர்கொண்டுவரும் நெருக்கடி நிலைமைகளை வெற்றிகொள்ள சகல கட்சிகளினதும், மக்களினதும், சிவில் பிரதிநிதிகளினதும் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்பதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதன் மூலமாகவே சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அரசாங்கம் வெளிப்படையாக செயற்பட வேண்டும் எனவும், மக்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற வேண்டும் எனவும்,சகல மக்களினதும் கருத்துக்களுக்கு இடமளித்து ஜனநாயக…
Author: admin
சீனாவின் உஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத்தொடங்கியதையடுத்து உலக நாடுகளையெல்லாம் இந்தப் பெருந்தொற்று தவிக்க வைத்தது. தற்போது அமெரிக்கா, இந்தியா,இலங்கை என பெரும்பாதிப்புக்கு ஆளான நாடுகள் பலவும் கொரோனாவை பெருமளவில் கட்டுப்படுத்தி விட்டன. ஆனால் சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக கடுமையான ஊரடங்கு பொது முடக்கங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு கட்டத்தில் இது மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வலுத்தன. இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில்,. பரிசோதனை மையங்கள் மூடப்பட்டன. தனிமைப்படுத்திக்கொள்வது தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் லேசான அறிகுறிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் அங்கு 15 நாட்களாக கொரோனா (ஒமிக்ரோன்) அலை தாண்டவமாடத்தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் யாரையும் விட்டு விடவில்லை. சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள், பீஜிங் தூதரக…
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதுவரையிலும் 20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் 108,510 பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 78,827 பேரும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 74,713 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் உள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கம் போல் உணவகத்தில் சமையல் வேலை செய்தபோது, அங்கிருந்த சமையல் எரிவாயு அடுப்பில் வாயு கசிந்து தீ விபத்து ஏற்படுள்ளதாகவும் , குறித்த பிரதேச மக்கள்,பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த தீயினால் சமைத்த உணவுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், ஹோட்டலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி அட்டப்பளம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதம நிருவாக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் ஆ.சசிந்திரன் உயிரிழந்தார்.. இவர், சமய கலாச்சார ஆன்மீக விடயங்களில் கூடுதலான ஈடுபாடு கொண்டவர். உயிரிழந்தவரின் உடல் கல்முனை அஷ்ரப்வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நிலக்கரியை தாங்கிய 5ஆவது கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அது நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில் மூழ்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார். தற்போதைய சூழலில் நிலக்கரியுடனான 24 கப்பல்கள் நாட்டை வந்தடைந்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதனை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் மழை வீழ்ச்சி குறைவடைந்தமையினால் எதிர்காலத்தில் நீர் மட்டம் குறைவடைவதற்கான ஏதுநிலைகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் மட்டம் 75 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது, கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கால்பந்து வீரர்களின் சர்வதேச கூட்டமைப்பு ட்விட்டர் பக்கத்தில், “தனது நாட்டின் பெண்களின் உரிமைகளுக்காகவும் அடிப்படை சுதந்திரத்திற்காக பிரசாரம் செய்த கால்பந்து வீரர் அமீர் நசீர், ஈரானில் மரண தண்டனையை எதிர்கொள்கிறார் என்ற அறிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளோம். அமீருக்கு நாங்கள் துணை நிற்கிறோம். அவரது தண்டனையை உடனடியாக நீக்க வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அமீர் நசீர்? – ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ள அமீர் நசீர்…
இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்கள் கடந்த நான்கு வருடங்களில் இருநூறு கோடிக்கும் அதிகமான பாரிய நட்டத்தைச் சந்தித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. கொழும்பு-இரத்மலானை சர்வதேச விமான நிலையம் தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வருவதாகவும், 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விமான நிலையத்தின் இழப்பு 169 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 46 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வருடத்திற்கு 13 விமானங்கள் இயக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தணிக்கை அறிக்கையின்படி, பயணிகள் நடமாட்டம் முறையே 60 மற்றும் 28 ஆக காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் (வெட்) வரி திருத்த சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுபடுத்தினார். அதற்கமைய, 14.12.2022 முதல் சட்டம் அமுலாகும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.