யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை! இந்த இடத்திற்கு எந்த ஆபத்தும் வராமல் நாம் இரவு முழுவதும் பாதுகாக்கின்றோம். நீர்கொழும்பில் விசேச பலகாய (SF) படைப்பிரிவினர்.
Author: admin
மின்சார சபையின் அறிவிப்பு. இன்று(10)நள்ளிரவு 12.00 முதல் பல நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிய ஒலிப்பதிவில் உண்மையில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், காலிமுகத்திடல் போராட்டம் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, இதன் மூலம் முழுமையான இராணுவ ஆட்சியை உருவாக்கும் நோக்கிலேயே கோத்தபாய அரசாங்கம் செயற்படுகிறது. தமது ஆட்சிக்கான அதிகார போதையில், சிங்கள மக்களுக்கு பொய்களைக் கூறிய ஆட்சியாளர்கள் – தமிழினத்தை இனவழிப்புச் செய்து இன்று தன் சொந்த இனத்தின் ஜனநாயக போராட்டங்களையே நசுக்க முனைந்து, பாரிய வன்முறைச் சம்பவங்களை உருவாக்கியிருக்கிறார்கள். கட்டுமீறிய இன்றைய சூழலில், இந்த கொலைகார, ஊழல், அடக்குமுறை ஆட்சியாளர்கள் மக்கள் மட்டத்திலிருந்து அகற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட அரசாங்கம்…
சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த இணக்கத்தை ஏற்றுள்ள சஜித் பிரேமதாச, சில தினங்களில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். இது குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்கொழும்பில் இனவாதத்தை தூண்ட எடுக்கப்பட்ட முயட்சி ஊர்வாசிகளால் முறியடிப்பு. வெளியில் இருந்து வந்த ஒரு கும்பல் சிங்கள-முஸ்லிம் மோதலை உருவாக்க முற்பட்டதும் கிராமத்தில் இருந்த சிங்கள முஸ்லிம் மக்கள் மற்றும் மதகுரு சிலர் ஒன்று கூடி அவர்களை விரட்டியடித்தனர். நிலைமை அமைதியானது.
ஏறாவூரில் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான அவரது காரியாளயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (09) இடம்பெற்ற மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (10) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். நேற்றைய தினம் தாக்குதலை நடத்தவிட்டு பொலிஸார் காத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்திய வன்னிநாயக்க, இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியதாகக் தெரிவித்தார். எனவே இவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணி வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்னும் நாட்டை விட்டு செல்வில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை மகிந்த தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருபவரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரை வெளியே வருமாறு கோரி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் திருகோணமலை ஊடாக நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சமூக ஊடக அறிக்கைகள் வெளியானதையடுத்து போராட்டக்காரர்கள் கடற்படை தளத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதை அடுத்து நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். “நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தயவு செய்து இதை நிறுத்த உங்கள் திறமையைப் பயன்படுத்தவும்” என பதிவிட்டுள்ளார்.