அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 80% பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 85% பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே 15ம் திகதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 49.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 53.6% ஆக பதிவாகியிருந்தது. மேலும் பெப்ரவரி மாதத்தில் 49.0 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 42.3 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மன நோய்கள் அதிகரிக்க கூடும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கிறார். இதனால் மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடும் என சுட்டிக்காட்டியுள்ள மனநல மருத்துவர் ரூமி ரூபன், இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கின்றார். இதற்கிடையில், மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவாக இருக்கும் என்றும் அதனால் அவர்கள் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார். அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்தனைத்திறன் குறைவடையக்கூடும் எனவும் இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெப்பமான காலநிலையைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் சுகாதாரத் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன. இவ்வாறான வழிகாட்டல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலைகளில் உள்ள வகுப்பறைகளில் சிறுவர்கள் இருப்பதனால் வெப்பத்துடன் பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடிபோதையில் பேருந்திற்குள் நுழைந்த நபர் பாலியல் துஷ்பியோகத்தை மேற்கொள்ள முயன்ற போது குறித்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்து இந்த ஆண்டு விவசாயிகளுக்கு யூரியா உர மானியத்தை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரங்கள் மற்றும் விவசாய உபகரணங்களை விவசாய அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் பணிகள் நாளை (22) இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட 07 மாவட்டங்களில் அரை ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் 71,000 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும், நாட்டில் உயர்தர விதைகள் மற்றும் நெல் பதப்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறைகள் மற்றும் அவற்றிற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்துடன், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஷவ்வால் பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி,முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவர் என்றும் அறிவித்துள்ளனர்.
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்துடன், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் காங்கசந்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படகு சேவையை பராமரிக்க குடிவரவு அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு தேவையான இதர உபகரண வசதிகளை வழங்க அதிக கால அவகாசம் எடுக்கும் என்பதால் அதனை ஒத்திவைக்க வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.