ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பில் முகநூலில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் உண்மைக்குப் புறம்பானது. 2022.05.03ஆம் திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என முகநூலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஜனாதிபதி அலுவலகம் அரச நிர்வாக அமைச்சுக்கு இவ்வாறு அறிவிப்பு விடுக்கவில்லை என்பதுடன், இந்த பொய்ப் பிரச்சாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 06.05.2022
Author: admin
இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட கலவரத்தில் பிரபல ஷாமன் ஞானக்காவின் அனுராதபுரத்தில் உள்ள ஹோட்டல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கனக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரதான ஜோதிடர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு கோபமடைந்த பொதுமக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட அரசாங்க அரசியலுடன் தொடர்புடைய பல சொத்துக்களில் ஞானக்காவின் ஹோட்டலும் அடங்கும். (நியூஸ் வயர்)
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்ஷ தனது பதவி விலகல் குறித்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டுள்ளார் என்பதுக் குறிப்பிட்டத்தக்கது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த 216 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 05 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் இரத்மலானை விமான நிலைய வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர். விடிய விடிய அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர். நைஜீரியாவில் இருந்து விமானமொன்று இன்று (10)அதிகாலை தரையிறங்க இருந்தது.
நாளை (10) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும். ⭕ ABCDEFGHIJKL ▪️ PQRSTUVW 📌 மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள். 📌 பி.ப. 5.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் ☑️ MNO | XYZ 📌 மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள் ⭕ CC 📌 மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள். முதலாம் கட்டம் 📌09:00 AM -11:00…
வன்முறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று(10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சுகாதார ஊழியர்களும் நேற்று(09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று(09) ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று(10) காலை 8 மணி வரை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர், வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார். பல ரயில்வே தொழிற்சங்கங்களும் நேற்று(09) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம பயணித்த வாகனம் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.