தேசிய அரசாங்கத்திற்கான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தாம் உட்பட பல கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி ஏற்கனவே அழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பிரகாரம், இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு தந்திரோபாயங்களின் ஊடாக அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
Author: admin
கொத்மலை ஓயாவில் மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதாகவும், அவற்றை உணவுக்காக எடுக்க வேண்டாம் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அம்பேவெல முதல் மெரயா, எல்ஜின், அக்கரகந்த வரையான ஆற்றில் சுமார் 12 கிலோ மீற்றர் வரை மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதக்கின்றன. இந்நிலையில் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பிரதேசவாசிகளும், தோட்டத் தொழிலாளர்கள் இறந்த மீன்களை எடுத்துச்செல்கின்றனர் என தெரியவந்துள்ளது. இவ்வாறு இறந்த மீன்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஷங்க விஜேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். மீன்கள் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொத்மலை ஓயாவில் மீன்கள் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீர் மாதிரிகள் மற்றும் இறந்த மீன்களுள் சில பரிசோதனைக்காக பேராதனை கன்னோருவையில் உள்ள பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலவாக்கலை கால்நடை வைத்தியர்…
சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (18) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே காணப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 312.07 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 327.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியினை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 48 மணித்தியாலங்களில் (இன்று காலை 6 மணி வரை) 7 கோடியே 55 இலட்சத்து 8100 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ் வீரகோன் தெரிவித்தார். இதன் போது இரண்டு இலட்சத்து 56, 225 வாகனங்கள் பயணித்ததாக அவர் கூறினார். சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் தெற்கு அதிவேக வீதி, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக வீதிகளை கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வருமானம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கூடுகளைப் பயன்படுத்தி குரங்குகளை பிடிப்பதற்காக விசேட பயற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களை சேதப்படுத்தும் குரங்களை அகற்றும் பணிகளுக்கு அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது.
இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்த நாட்டிலிருந்து குரங்குகளை பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளை எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது எனவும், விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என எவரும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி இன்று (17) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நுவரெலியாவில் தற்போது வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவதற்கு ஏராளமான உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இதில் ஒரு கட்டமாக வருடம் தோறும் குறித்த மலர் கண்காட்சி நடைபெறும் . இம்முறை விக்டோரியா பூங்காவில் நவீன மயப்படுத்தப்பட்டு , புதிய அரியவகையான பூக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த மலர் கண்காட்சியில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்கள் இணைந்திருந்தனர். அரச மற்றும் தனியார் பிரிவுகளிலிருந்து பல போட்டியாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.இம்மலர் கண்காட்சிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது. நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மலர்…
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சாதனைத் தமிழர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வருவாகும் 800 திரைப்படத்தின் முதற்பார்வை வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரனின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஒஸ்கார் விருது வென்ற ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த மாதுர் மிட்டல் நடிக்கிறார். முதலில் இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவின் மேற்கே கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 62 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் சரக்குகளை ஏற்றிச் சென்ற இந்திய டவ் கப்பலுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கப்பலின் 23 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 65 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கஞ்சா மற்றும் இந்திய டவ் கப்பல் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.