குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது. மாற்றுப் பாலினத்தவர்கள், பாதிக்கப்படக்கூடியவர்கள், வறுமையில் உள்ளவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் ஆகிய 4 வகைகளின் கீழ் இந்த நலத்திட்ட உதவி தொகைகள் வழங்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் நிதி உதவி பெறும் முதியோர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கவுள்ளது. இந்த சமூக நலத்திட்டத்திற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3.7 மில்லியனுக்கும் அதிகமாகும்.
Author: admin
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். காசல் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர் வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டில் கடனட்டைகளின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வருடம், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 52,991 இலட்சம் எனவும், இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இலங்கையில் செயற்படும் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 42,272 இலட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெப்ரவரி மாதத்திற்குள் அது மேலும் 40,872 இலட்சமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த அட்டைகளுக்காக செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் 42,061 மில்லியன் ரூபாவாகவும், பெப்ரவரி மாத இறுதியில் 41,001 மில்லியன் ரூபாவாகவும் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.எஸ்.எம். சுபோதானி உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சரின் தலையீட்டினால் மேலதிக செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆசிரியர் இடமாற்றங்களை சீரமைக்கும் நோக்கில் கடந்த மாதம் ஆசிரியர் இடமாற்ற சபையை ஜனாதிபதி கலைத்த போதும், ஆசிரியர் இடமாற்றச் சபை கலைக்கப்பட்ட போதிலும், ஆசிரியர் இடமாற்றத் திட்டம் அப்படியே தொடர்வதாக அதிபர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் சேமிப்பில் இருந்து 54 எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சிலிண்டர்களின் பெறுமதி 4,32,000 ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். நீதவான் நீதிமன்றப் பதிவாளரால் குளியாப்பிட்டிய பொலிஸ் நியைத்தில் நேற்று (21) செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த கேஸ் சிலிண்டர்கள் திருடப்பட்ட சரியான திகதி இன்னும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, அவர் அல்லது அவள் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் கோரலாம். அந்த உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் தேசிய மொழிகளாகக் கருதப்படுவதாகவும், ஒரு…
அம்பாறை – பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் 15 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தனது வீட்டில் 12 போர் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அக்குரணை பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என 119 பொலிஸ்அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை ஹரிஸ்பத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்;“.. ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த விழுமியங்களையும் பாதுகாத்து நேர்மையாக நோன்பு நோற்று முஸ்லிம்கள் தம்மை அர்பணிக்கின்றனர். ரமழான் மாதம், நோன்பு நோற்று காலத்தை கழிப்பதாக மட்டுமின்றி, ஏனைய சமூகத்தவர் மீதான கரிசணை மற்றும் தியாகம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் சிறப்புக்களை உலகிற்கு உரைப்பதாகவும் அமைந்துள்ளது. சமாதானம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னெடுக்கும் பணிகளின்போது, இந்த சமூகக் கோட்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு அவற்றை சமூக நலனுக்காக பயன்படுத்த நாம் அனைவரும்…
உயர்தர தமிழ் மொழி விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான முதற்கட்ட பணிகள் இன்று (21) ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பல பாடங்கள் தொடர்பில் கட்டுப்பாட்டு விடைத்தாள் குறியிடும் நடைமுறையை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், இந்திய நடனம், ஓரியண்டல் இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, கலை, நாடகம் மற்றும் நாடகக் கலைகள் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குரணாகலை ஆகிய நகரங்களில் உள்ள விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்களம் மற்றும் ஆங்கில மொழி உட்பட ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டை ஆரம்பிப்பதற்கு போதிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவது…