புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று (16) பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ,இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில் மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பல சுயேச்சை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். மேலும்,எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நான்கு அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Author: admin
பாராளுமன்றம் நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே நாளைய தினம் பாராளுமன்றத்தில் முதலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, *பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.* ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் *அஜித் ராஜபக்ஷவின் பெயரும்,* ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் *ரோஹினி கவிரத்னவின் பெயரும்* முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நாளை மேலும் இரண்டு பாராளுமன்றத் வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாளை பாராளுமன்ற ஆசனங்களில் மாற்றம் இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று பிற்பகல் எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் சில தீர்மானங்கள் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த சுற்றறிக்கைகளை ரத்து செய்யுமாறு இறக்குமதியாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை கட்டண அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கி பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையுவுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்போது இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீட்க முடியாதுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தியவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் – பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை அத்தியவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பிரதமரின் அழைப்பின் பேரில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. இன்றைய கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அண்டுக்கான முதல் சந்திர கிரகணம் மே 15-16 ஆகிய தேதிகளில் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தை எங்கே எப்போது காணலாம் ஆகிய விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்குகிறோம். சந்திர கிரகணம் என்றால் என்ன? சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரனும் சூரியனும் பூமியில் இருந்து நேர் கோட்டில், எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் (total lunar eclipse) நிகழும். பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது பகுதி சந்திர கிரகணம் (partial lunar eclipse) நிகழ்கிறது. பூமியின் உள்நிழல் ஆங்கிலத்தில் ‘umbra’ என்றும், புறநிழல் ஆங்கிலத்தில் ‘penumbra’ என்றும் அழைக்கப்படுகிறது. புறநிழல் சந்திர கிரகணத்தின்போது, சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. சூரியன் – பூமி – நிலவு ஆகிய மூன்றும் நேர்கோட்டில் இருக்கும்போது, பூமியின் உள்நிழல் நிலவின்மீது விழுந்து அதை…
இந்திய கடன்திட்டத்தின் கீழ் இதுவரை 12 கப்பல்களில் 400,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், எரிபொருளை இறக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவாகும். அதேவேளை இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியின் உண்மை தன்மை மற்றும் நெருக்கடியை தீர்த்து வலுவான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் வெளிப்படுத்துவார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டை மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரீட்சைக்கு தேவையான கண்காணிப்பு பணிக்குழாமினரும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அநுராதபுர நகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரின் வீடுகள், அநுராதபுர நகர மேயரின் வீட்டையும் தாக்கியழித்து, தீவைத்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு உள்ளிட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முன்னணி வர்த்தகர் உள்ளிட்ட 20 – 53 வயதுடைய நபர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.