இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இன்று (18) மூலோபாய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளார். ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் இடம்பெறும் முதலாவது மூலோபாய உரையாடல் இதுவாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இந்த மூலோபாய உரையாடலின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து விவாதிக்க இரு தரப்பினருக்கும் ஒரு தளம் கிடைக்கும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Author: admin
மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் E.M.S.P.ஏக்கநாயகவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் பொதுவாழ்க்கையை பேணுவதற்கு உரிய நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் இன்றியமையாதவை என்பதால் அந்த சேவைகளில் தடையோ அல்லது இடையூறுகளோ ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டே அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளனர். பல வெளிநாட்டு தூதரகங்களும், அதிகாரிகளும் இலங்கையில் இல்லை, இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கை தொடர்பான கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் தரகர்கள் மூலம் போலியான தகவல்களை வழங்கி போலி விசாவைத் தயாரித்து அவர்கள் மூலம் செல்வதாக தெரிய வந்துள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்ட மோல்டா வீசாவுடன் இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த மோசடி நடைமுறை அம்பலத்திற்கு வந்துள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதத்தில் இளைஞர் ஒருவருடன் ஒரினச் சேர்க்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேக்கரி உரிமையாளரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், சனிக்கிழமை (15) உத்தரவிட்டார்.
பதுளை தல்தெனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 09 கைதிகளில் 06 பேர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று (17) காலை இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டதாகவும், இரவு வேளையில் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நால்வரும் கந்தகெட்டிய வெள்ளவத்தென்ன பிரதேசத்தில் பதுங்கி இருந்ததாகவும், அவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மட்டக்குளி மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 23 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் இன்று (18) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். தப்பியோடிய மேலும் மூன்று கைதிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அரை சொகுசு பஸ்களை எதிர்வரும் மாதம் முதல் ரத்து செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்க பெறுகின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரேன்டா தெரிவித்துள்ளார். “போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின்படி அரை சொகுசு சேவையை சாதாரண சேவையாகவும், சொகுசு சேவையாகவும் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, அனைத்து பஸ் உரிமையாளர்களும் தங்களது பஸ்களை சாதாரண சேவையாகவோ அல்லது சொகுசு சேவையாகவோ மாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் வசூலிக்காமல் செய்து வருகிறோம். தற்போது 430 பஸ்கள் உள்ளன.இவ்வாறு சேவை திருத்தம் கோரி சுமார் 20 பஸ்களுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. மே மாதம் 31ம் திகதி வரை சேவை திருத்தம் மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த நடைமுறையை அமுல்படுத்துவது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…
வெற்றிலையோடு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் ரோடமைன் பி என்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மம் இருப்பது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட நாற்பத்தெட்டு வெற்றிலை பொதி மாதிரிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் இந்த புற்று நோய் உண்டாக்கும் இரசாயனம் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ரோடமைன் பி என்பது ஆடை மற்றும் காகித அச்சிடும் தொழில்களில் நிறமியாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும், மேலும் இது களைக்கொல்லிகளை நிறமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் செயற்கை சாய இரசாயனமாகும். எனவே, உண்ணக்கூடிய சுண்ணக்கட்டியின் நிறத்தை மாற்ற இதுபோன்ற இரசாயனத்தைப் பயன்படுத்துவது கடுமையான சமூகக் குற்றம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் முக்கிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கும், அவர்களை சட்டமியற்றும் செயல்முறைக்குள் சேர்க்க நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுளளது.
அத்தோடு மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் தற்போது உதவி பயன்பெறும் முதியோர்களுக்கு தனித்தனியான நலத்திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, உத்தேச நலத்திட்டங்கள் 01-07-2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மொத்த செலவு ஆண்டுக்கு சுமார் 206 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட காலம் இன்று நிறைவடைகின்றதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தொடர்ந்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைபாதை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டிருந்தது, அத்துடன், அவர்களிடம் இருந்து அதற்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.