எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. நேற்றைய தினம் (22) தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா, டெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இவ் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Author: admin
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 400,000 ஐ எட்டியுள்ளது இது நாட்டின் சுற்றுலாத் துறையானது மீட்சியின் பாதையில் உறுதியாக இருப்பதைக் குறிக்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தற்காலிகத் தரவுகளின் படி ஏப்ரல் 01-20 வரையான காலப்பகுதியில் மொத்தம் 69,799 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர். முதல் மூன்று மாதங்களில் 335,679 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 405,478 ஆக இருந்தது. இந்த மாதத்தில் வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். அதன்படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 11,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், ரஷ்யாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,593 ஆகும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால், குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம் உள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவையும் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று (23) தினசரி மின் தேவை 45 கிகாவோட்டாக அதிகரித்துள்ளது. மாலை ஏழு மணியளவில் அதிகபட்சமாக 2,097 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் தம்மிக்க என். நவரத்ன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (24) முதல் சத்திரசிகிச்சைகள் வழமை போன்று இடம்பெறும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் பல நோயாளிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அண்மையில் தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘பிரெட்னிசோலோன்’ என்ற கண் சொட்டு மருந்தின் பயன்பாடு, இந்த சிக்கல்களை ஏற்படுத்தியதாக கண்டறியப்பட்டது. இதன் மூலம், சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய, பிரெட்னிசோலோன் (Prednisolone) பாவனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் விசேட விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை முதல் வழமை போன்று கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து “தாமரை” பகுதியை நீக்கி, அதன் பெயரை “கொழும்பு கோபுரம்” என மாற்றுவதற்கான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயரமான கோபுரத்திற்கு தாமரை கோபுரம் என்ற பெயர் ஏற்புடையதல்ல என்ற கருத்தும் இந்த பெயரை மாற்றக் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மூன்று மாத காலத்துக்குள், பஸ்கள் மற்றும் ரயில்களுக்கும் QR முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்துத் துறையை சிறந்த பயனுள்ளதாக முன்னேற்றுவதற்கும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கும் நோக்கிலும் மூன்று மாதங்களுக்குள் பயணிகள் பஸ் மற்றும் ரயில் பிரயாணச்சீட்டுக்களை விநியோகித்தல், ஆசனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் QR முறைமையின் கீழ் மேற்கொள்ளும் வகையில் முழுமையான டிஜிட்டல் மயப்படுத்தலுக்குட்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேற்படி டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச யோசனைகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் எந்த விதத்திலும் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறான நடைமுறை மேற்கொள்ளப்படாததன் காரணத்தினால் போக்குவரத்துத் துறையில் ஊழல் மோசடிகள் அதிகரித்து…
உயர்தர பரீட்சை விடைத்தாள்களை பகுதிகளாக திருத்துவது பெறுபேறுகளுக்கு பங்களிக்காது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் கூறியதாவது: தமிழ் மொழி தேர்வு வினாத்தாள்களை மட்டும் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கப்பட்டாலும், அது முழுமைக்கும் நல்லதல்ல. இதேவேளை, ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் கல்வி அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (21) கல்வி அமைச்சில் நடைபெற்றது. உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ரசிக ஹந்தபாங்கொட ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து 11,000க்கும் மேற்பட்ட சிசுக்கள் ஐரோப்பாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, இன்டர்போல் பொலிஸார் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கைக் குழந்தைகளை விற்பனை மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரிய வந்துள்ளது. 60 முதல் 80 டொலர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள் 6,000 முதல் 8,000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 4,000 இலங்கை சிசுக்கள் நெதர்லாந்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, இன்டர்போல் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவலை நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது. அதன்படி கடத்தலில் ஈடுபட்ட தம்பதிகள் இலங்கைக் குழந்தைகளுக்கான மலேசிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக பொய்யான தகவலை வழங்கிய நபரை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அவசர இலக்கமான 118க்கு தொடர்பு கொண்டு, அக்குரணையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என நபர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். தான் மாவனெல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதன்படி செயற்பட்ட பொலிஸார் இராணுவத்தினரின் ஆதரவுடன் அக்குரணை நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 19ஆம் திகதி மற்றுமொரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தான் ஹல்துமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என தகவல் வழங்கிய நபர்…
நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது, பஞ்சிகாவத்தைப் பகுதியில் பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்திய மற்றும் வாகனத்தின் பாகங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மருதானை மற்றும் கொழும்பு -12 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேற்கொள் ளப்பட்ட விசாரணையையடுத்து, இவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தாக, பொலிஸார் தெரிவித்தனர்.