கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 3 மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355 தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். மேலும், பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 10 வீதமானவர்கள் சிறுவர்கள் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
Author: admin
நாட்டில் மலேரியா காய்ச்சல் பரவுவதில் அதிகரிப்பு காணப்படுவதாக மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பின் (MCC) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள், இரத்தின வியாபாரிகள் மற்றும் இலங்கைக்கு திரும்பும் அமைதி காக்கும் படை வீரர்கள் ஆகியோரின் மூலம் இந்த நோய் இலங்கைக்கு காவப்படுகிறது. MCC பணிப்பாளர் வைத்தியர் சம்பா அலுத்வீர ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், ஆசிய நாடுகளில் அண்மைக் காலத்தில் கிட்டத்தட்ட 600,000 மலேரியா நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறினார். இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25 ஆம் திகதி மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சார தினம் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி, மலேரியா மற்றும் கொசுக்களால் பரவும் நோய்கள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக நாடு முழுவதும் 8,200 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறுபோகத்தில் நெற் பயிர்செய்கைக்கான விவசாயிகளின் உர கொள்வனவுக்கு, நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 5 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவுக்காக இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய, ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடலுக்காக 20 ஆயிரம் ரூபாவும், 2 ஹெக்டயருக்கு 40 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமரானால் இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சீன அரசு தயாராக இருக்கின்றது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவதற்கான நடவடிக்கைகள் மொட்டுக் கட்சியால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு மஹிந்த மீண்டும் பிரதமராகி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்ப்பாரானால் சர்வதேச நாணய நிதியத்தின் மிகுதி நிதி கிடைக்காமல் போய்விடும். அதை ஈடுசெய்வதற்காகவும் இலங்கையை மீண்டும் தனது பிடிக்குள் கொண்டு வருவதாகவுமே சீனா இவ்வாறான உதவித் திட்டத்தை அறிவிக்கவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரத்தில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதாரப் பிரச்சினையின் தொடக்கத்தில் சீனா இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி உதவுவதற்கு முன்வந்தது.
இன்று இலங்கையின் 15 மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவவுள்ளது. இதன்படி, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கடும் வெப்ப நிலை நிலவும். இதனால் அங்கு வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டையில் இன்று அதிகாலை 4.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை 12.45 மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லையெனவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
வடக்கு,வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யு ம்என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
தற்போது நிலவும் உயர் வெப்பநிலையுடனான காலநிலையினால் ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்துகளிலிருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள, பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்: 1.வயதுவந்தவர்கள் தமது உடலின் நீரினளவை பேணுவதற்கு , தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், நாளாந்தம் ஆகக் குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீர் அருந்துவதனை உறுதி செய்யவும். 2. உங்கள் தாகத்தைத் தணிக்க காபனேற்றப்பட்ட, அதிக சீனி சேர்க்கப்பட்ட பானங்களுக்கு பதிலாக தண்ணீருக்கு முன்னுரிமை வழங்கவும். 3. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நேரடியான சூரிய ஒளியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை இயன்றளவு குறையுங்கள். 4. குளிர்ச்சியாகவும் வசதியாகவும் இருக்க வெளிர் நிறங்களுடைய, காற்றோட்டமுள்ள பருத்தி ஆடைகளைத் தேர்வு செய்யவும். 5. வெளியில் நேரத்தை செலவிடும் போது சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து மேலதிக பாதுகாப்பை உங்களுக்கு வழங்குவதற்காக குடைகள் மற்றும் தொப்பிகளைப் பயன்படுத்தவும். 6. அதிக வெப்பநிலையினால் மிகவிரைவாக பாதிப்படையக் கூடிய ஆபத்துள்ள…
நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார். ” நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் சேவை தேவையாக உள்ளது. எனவே, மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா – கந்தபளை ரயில் நிலையத்துக்கிடையில் ரயில் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய ரயில் பாதையும் நிர்மாணிக்கப்படும். நுவரெலியாவில் இருந்து கொழும்பு வரை மரக்கறிகளை கொண்டு வருவதற்கு நானுஓயா ரயில் நிலையத்தை மையப்படுத்தி பொருளாதார மத்திய நிலைய பிரிவொன்று அமைக்கப்படும். ” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளை, நானுஓயா ரயில் நிலையத்துக்கு வருகை தந்திருந்த அமைச்சர், நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்ல வரை செல்வதற்கு…
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்குரிய திட்டமிடல் அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு – வடக்கு துறைமுகத்தின் 30 வருட அபிவிருத்தி திட்டத்தினை வெளியிடுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு, மேற்கு இறங்குதுறைகளின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெற்று வருகின்ற நிலையில், 2030 ஆண்டளவில் அவற்றை முழுமைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நான் முதலில் அமைச்சருக்கும் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபைக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறேன். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினை இரு…