நிதித்துறையில் பாதுகாப்பு வலையமைப்பு திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நிதிகள் வைப்பு பாதுகாப்பு நெட்வொர்க்கிற்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் முழு வங்கி முறைமையையும் பலப்படுத்துவது மிகவும் முக்கியமானது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Author: admin
பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாராளுமன்றம் இன்று (25) ஆரம்பமான போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை அறிவித்தார். பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது அது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும், அடுத்த சில வருடங்களில் பணவீக்கம் குறைவடையும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், பணவீக்கம் குறைவினால் பொருட்களின் விலை குறைவதில் பாதிப்பு உள்ளதா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் குறைவடைதல் ஊடாக பணவீக்கத்தின் நிலைமையை தீர்மானிக்க முடியாது. பணவீக்கம் கூடுவதும், குறைவதும் நீண்ட கால தொழில்நுட்ப சூழ்நிலை என்றும், அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்க 12% முதல் 15% வரை இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை எல்பிஎல் அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் கீழே:- வெஸ்ட் இண்டீஸ் – டுவேன் பிராவோ, கைரோன் பொல்லார்ட், ஜான்சன் சார்ல்ஸ் மற்றும் ஏஷ்லி நர்ஸ் நியூசிலாந்து – மிட்செல் சென்டர், இஷ் சோதி, டிம் சிஃப்ட், டெரில் மிட்செல் மற்றும் டக் பிரேஸ்வெல் அயர்லாந்து – போல் ஸ்டிர்லிங் நமீபியா – ஜெரார்ட் எரஸ்மஸ் பங்களாதேஷ் – ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் அஃபிஃப் ஹொசைன் பாகிஸ்தான் – முகமது நவாஸ், நசீம் ஷா மற்றும் வஹாப் ரியாஸ் தென்னாப்பிரிக்கா – லுங்கி என்கிடி, இம்ரான் தாஹிர் மற்றும் தப்ரீஸ் ஷம்சி ஆஸ்திரேலியா – ஷோன் மார்ஷ், மேத்யூ வேட்,…
எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மீதான வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைளை தடுப்பதற்காக 250 மில்லியன் டொலரை இலஞ்சமாக சாமர குணசேகர என்பவரே பெற்றுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். ஆனால், சாட்சியம் கிடைக்கவில்லை.எனவே பொலிஸார்தான் உண்மையை கண்டுப்பிடிக்க வேண்டும் என்றார். அத்துடன் எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கான .நஷ்டஈடு தொடர்பான வழக்கு தோல்வியடைந்தால் அதன் பொறுப்பை சுற்றாடல் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவே ஏற்க வேண்டும் எனவும் அவர் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கும்,கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கான நஷ்டஈடு தொடர்பில் துறைசார் நிபுணர்கள் இடைக்கால…
அடுத்த 25 வருடங்களுக்கு தேசிய கல்விக் கொள்கை மற்றும் அது தொடர்பான சீர்திருத்த முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் பங்களிப்புடன் 10 பேர் கொண்ட உபகுழு நியமிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான செயற்பாட்டின் போது அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் புதிய கல்விக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
பலாங்கொடை, கொடகும்புர பிரதேசத்தில் நேற்று (24) மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரெனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து, அவர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில், அங்கு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பேருவளை – சீனக்கோட்டை பகுதியில் 14 வருடங்களின் பின்னர் நாட்டில் மலேரியா நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி பேருவளை – சீனக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இரத்தின வியாபாரியான இவர், தான்சானியா சென்று, ஏப்ரல் 10ம் திகதி நாடு திரும்பியுள்ளார். கடந்த 14 ஆம் திகதி காய்ச்சல் தீவிரமடைந்ததால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் 15 ஆம் திகதி வர்த்தகர் உயிரிழந்துள்ளார். இங்கு நடத்தப்பட்ட சோதனையில் இவருக்கு மலேரியா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. குறித்த நபர் சுமார் இரண்டு வாரங்களாக வீட்டில் தங்கியிருந்ததால், குடியிருப்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக களுத்துறை தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் தாமர களுபோவில தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மலேரியா மரணம் எதுவும் பதிவாகாத நிலையில், மேலும் 2016 ஆம் ஆண்டு உலக…
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய (24) தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயானது இன்றும் நிலையாக உள்ளது. மக்கள் வங்கியில் அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல் ரூ. 311.11 மற்றும் ரூ. முறையே 329.78வாக காணப்படுகின்றது. கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி அமெரிக்க டாலரின் வாங்கும் விகிதம் மாற்றமின்றி ரூ. 310.05, விற்பனை விலையும் மாறாமல் ரூ. 327.50வாக காணப்படுகின்றது. சம்பத் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்களும் மாறாமல் ரூ. 314 மற்றும் ரூ. முறையே 328வாக காணப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திற்கேற்ப செயற்படாமல் வரி சலுகைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது. எனவே அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துலு குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , சர்வதேச நாணய நிதியம் என்பது சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். எனவே அதன் நிபந்தனைகள் மற்றும் யோசனைகள் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான வழிமுறைகள் உள்ளன. அவற்றுக்கு புறம்பாக எம்மால் செயற்பட முடியாது. நாணய நிதியத்தின் ஆரம்ப நிபந்தனைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமானது சர்வதேச கடன்களுக்கான வட்டியை செலுத்தக் கூடிய திட்டமிடலை சமர்ப்பிப்பதாகும். இதன் மூலம் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு வரி சலுகை வழங்குவது…