யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது. உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
கல்வித்துறையில் நிலவும் தொழில்சார் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இதனை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் சாதகமாக செயல்படுவது முக்கியம் என அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் வாரத்திற்குள் உயர்தர விடைத்தாள்களை ஆசிரியர்கள் சரிபார்க்காவிட்டால் அவசர சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவோம் என ஜனாதிபதி தெரிவித்தார். இது தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். “.. அந்த சேவையின் முக்கியத்துவத்தையும், அந்த சேவையின் மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய சேவையையும் கருத்தில் கொண்டு சில சேவைகள் அத்தியாவசிய சேவையாக இருக்க வேண்டும். மற்றபடி, தொழில் வல்லுநர்கள் குழு தங்கள் தொழில் சார்ந்த…
கண்டி, அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட பள்ளிவாசல்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்படுமென, பொலிஸ் அவசர பிரிவுக்குக் கிடைத்த அநாமதேய தகவலை அடுத்து, அப்பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டிருக்கும் சகல பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அநாமதேய அழைப்பு, செவ்வாய்க்கிழமை(18) பிற்பகல் 2.45க்கு 118 என்ற பொலிஸ் அவசர இலக்கத்துக்கே கிடைத்துள்ளது. இதனையடுத்து மத்திய மாகாண உயர்பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தனர். இதனடிப்படையில் அப்பொலிஸ் பிரிவு உட்பட 72 பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் குழு மற்றும் இராணுவ குழு கடமைக்கு அழைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவ்வாறான தகவல்கள் எவையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என புலனாய்வு தரப்பினர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிறையின் அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதிக விலைக்கு முட்டைகளை நிறை அடிப்படையில் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனவரி 20 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்தது. இதன்படி வெள்ளை முட்டை 44 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை 46 ரூபாவாகவும் இருந்தது.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு கொழும்பில் உள்ள பல பிரதான தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு ரோயல் கல்லூரி உட்பட பல பாடசாலைகளின் அதிபர்கள் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஆசிரியர் இடமாற்றங்கள் எந்தவொரு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோல்களின் கீழும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், மாணவர்கள் முதலாம் தரத்திற்கு பிரவேசித்துள்ளமையும், கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப்பு பரீட்சை இன்னும் இடம்பெறாமை ஆகியவற்றினையும் மேற்கோள் காட்டி குறித்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்ததுடன், ஆசிரியர் சங்கங்களின் தேவைக்கேற்ப ஆசிரியர் இடமாற்றங்களை நிறுத்தி முறைப்படி ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரை அறிக்கை பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கேகாலை – ரம்புக்கனையில் கடந்த 2022 ஏப்ரல் 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதிப் பரிந்துரை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்பை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும் பிரதம நீதியரசருக்குமே உள்ளது. அதுதவிர கர்தினாலுக்கு அந்த அதிகாரம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (19) கண்டி தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த வேளையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்தாவிட்டால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் முடிவெடுக்கும் எனவும் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அந்த பணத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. மலேரியா பரவும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களிடம் இருந்து மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சம்பா அளுத்வீர தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாட்டு பணியாளர்கள், இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் அமைதி காக்கும் படையினர் மற்றும் வௌிநாடு செல்லும் மக்கள் ஊடாக மலேரியா நாட்டிற்குள் வரக்கூடும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலப்பகுதியில், ஆசியாவில் சுமார் 600,000 மலேரியா நோயாளிகள் இறந்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் இலங்கையில் 37 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அமைப்பு 2023-ம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா தாண்டி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட 30 லட்சம் கூடுதலாக இருக்கும். எனவே, தற்போதைய சூழலில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலிடத்தை இந்தியா பிடித்ததாக ஐநா கணித்து கூறியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 142.86 கோடி எனவும் சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடி என தோராயமாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பானது இறுதியாக 2011இல் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் 2021இல் எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொவிட்-19 காரணமாக தள்ளிப்போனது. எனவே, இந்திய மக்கள்தொகையின் உறுதியான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரியவில்லை. எனவே, பல்வேறு தரவுகளை கணக்கில் கொண்டு இந்த முடிவை…
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை, சுமார் 10% அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மக்கள் முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதன் துணைப் பொது கண்காணிப்பாளர் என். யு. கே. ரணதுங்க தெரிவித்துள்ளார். தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நிலைமையை நிர்வகித்து வருவதாகவும் அவர் கூறினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நீண்டகாலத்திற்கு பிரச்சினையின்றி நீரினை வழங்க முடியும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது அத்தியட்சகர் மேலும் சுட்டிக்காட்டினார்.