எதிர்வரும் வெசாக் பண்டிகையினை கருத்திற் கொண்டு மேலதிகமாக ஒரு நாளுக்கு மதுபான சாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினால் பாரிய வருமான இழப்பு ஏற்படும் என காலல் திணைக்களம் கூறியுள்ளது. மே 5 மற்றும் 6 ஆகிய வழக்கமான இரு வெசாக் விடுமுறை நாட்களுக்கு மேலதிகமாக மே 4 ஆம் திகதியும் மதுபான சாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் குறித்த தினத்தில் 337 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படும் என திணைக்களம் கூறியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளுள் ஒன்றாக கலால் திணைக்களம் உள்ளது. இதனால் ஆண்டுக்கு 117 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 18 வழக்கமான விடுமுறை நாட்களில் மதுபான சலைகளை மூடுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் மேலதிகமாக ஒருநாள் மதுபான சாலைகள் மூடப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
Author: admin
எதிர்வரும் மே 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை புனித வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இந்த பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் பல்வேறு சமய மற்றும் சமூக நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இம்முறை அரச வெசாக் விழா சிலாபம் கெதெல்லேவ ஸ்ரீ ரத்தனசிறி பிரிவேனா விஹாரையில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் முப்பெரும் பீடாதிபதிகளின் தலைமையில் அரச வெசாக் விழா நடைபெறவுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் அதே வைத்தியசாலையில் இனந்தெரியாத ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதவாச்சி, மன்னார் சந்தி பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் நேற்று (27) மாலை பலரினால் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 11 ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அதே போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (28) அதிகாலை 05 மணியளவில் பிரிவிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் இளைஞனின் கழுத்து மற்றும் காலில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அப்போது உடனடியாகச் செயல்பட்ட மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.…
இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணையவழி பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (28) நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் எரிபொருள் விற்பனை ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான காலக்கெடு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். யுனைடெட் பெட்ரோலியம் அடுத்த வாரத்தில் தொடங்கும் திகதிகளைத் தெரிவிக்கும் என்று அவர் மேலும் கூறினார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த விசேட நிபுணர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமைச்சின் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்த பின்னர் செயற்றிட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ் சத்யானந்த தெரிவித்துள்ளார்.
சிகிரியா ஓவிய குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 04 கோடி ரூபா நிதியுதவி வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது. இந்த நிதி அடுத்த மாதமளவில் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. அதனூடாக தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் படிக்கட்டுகள் விரைவில் புனரமைக்கப்படும் என மத்திய கலாசார நிதியம் குறிப்பிடுகின்றது. இதேவேளை, சிகிரியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்கும் கட்டண முறைமையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. உணவருந்தியவர்களில் சுமார் 26இற்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28) பிற்பகல் நடைபெற்றது. குறித்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் செலுத்தப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்தினால், 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட, 2.9 பில்லியன் டொலர் நிதி வசதி வழங்கப்படுகிறது. இந்த உடன்படிக்கை, கடந்த மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் இன்றி, சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு இந்த விடயம் தொடர்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதன் காரணமாக நடுநிலைமை, கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது சிக்கலாகி வருவதாக பெப்ரல் அமைப்பு தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா சிலாபத்தில் நடைபெறவுள்ளது. சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபல்லாவல்ல ஸ்ரீ ரதனசிறி பிரிவென் விகாரை ஆலயத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன இதனைத் தெரிவித்துள்ளார். வெசாக் வாரத்தை முன்னிட்டு மே மாதம் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பல சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.