முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்கள் மீது தொடரப்பட்ட 29 வழக்குகளில் 41 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வத்தளை, அத்தனகல்ல, நீர்கொழும்பு, மினுவாங்கொடை, கம்பஹா, மஹர பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வலஸ்முல்ல நீதிமன்றத்தினால் 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்தது. அத்துடன், மாத்தறை, தெய்யந்தர நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு அமைவாக, தலா ஒரு இலட்சம் ரூபா அபராதமும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் 6 வழக்குகளில் 6 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும், சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த நிர்ணய விலையை விட அதிக விலைக்கு…
Author: admin
கடந்த மூன்று மாதங்களில் நாட்டின் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் 5 மில்லியன் கிலோ தேயிலை குறைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு 63 மில்லியன் கிலோவாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 58 மில்லியன் கிலோவாகவும் உள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 62 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் 54 மில்லியன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளது. எனினும் தேயிலை ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு கிலோ தேயிலையின் விலை அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது.
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2023 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்கள் தொடர்பான விபர பட்டியலை வெளியிட்டுள்ளது.
வாழைப்பழத்தை காட்டி வெறுப்பேற்றிய பெண்ணை காட்டு யானை ஒன்று முட்டித் தள்ளியுள்ளது. வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். யானை முட்டியதில் அந்தப் பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. புத்திசாலித்தனமான விலங்குகளான யானைகளை பழக்கினாலும் கூட ஏமாற்ற முடியாது என்று வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் வலுவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருவாய்கள் என்பன கடந்த மார்ச் மாதத்தில், குறிப்பிடத்தக்க மேம்பாட்டினைப் பதிவு செய்திருந்தன. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட கொள்கைத் தளர்வினால் ஏற்பட்ட மேம்பாடுகளினால் கடந்த மார்ச் மாதத்தில், செலாவணி வீதம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்ததுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துருகிரிய துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (29) பிற்பகல் முதல் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில், கோளாறு சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்களிடையே இணக்கம் காணப்படாததன் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட 3 சுயேச்சை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை நியமிப்பது தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு என்பன உறுப்பினர்களை நியமிக்க முடியாதமல் இழுபறி நிலையில் காணப்படும் ஏனைய இரண்டு ஆணைக்குழுக்களாகும். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு புதிய அரசியலமைப்புச் பேரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் கலைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவிருந்தனர். ஜனாதிபதி, பிரதமரின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் அடங்கிய அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்களின் நியமனம் தொடர்பான பொறுப்பு கையளிக்கப்பட்டது. எனினும், இந்த பேரவையில் உள்ள பல உறுப்பினர்களின் இழுபறி காரணமாக சுயாதீன நிறுவனங்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் தாமதமாகி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் அந்த நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றன.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலுக்கு எதிரான வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற குழுவொன்றை நியமிப்பது முக்கியமானது என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இவ்வாறான குழுவொன்றை நியமிப்பதன் மூலம் சம்பவத்தின் மூலகாரணங்கள் அனைத்தும் வெளிவரும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகரிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் ஒன்றாக உணவருந்திய பின்னர் தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்காக இரண்டு நாட்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாமல் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொட ஹிரேவத்தையைச் சேர்ந்த ஆர்.ஜே.ரொஷான் குமார என்ற 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சந்தேக நபரால் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.