ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. ஆசிய நாடுகளில் அதிக நீரிழிவு நோயைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நான்கு பெரியவர்களில் ஒருவருக்கு, அதாவது 23% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில், அந்த எண்ணிக்கை 31% ஆக அதிகரித்துள்ளது, அதாவது மூன்று பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Author: admin
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.யு.கே.ரணதுங்க தெரிவித்திருந்தார். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரை வீட்டுத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.யு.கே.ரணதுங்க, மாற்று வழிகள் மூலம் நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்துத் தெரிவித்தார். தற்போது நிலவும் அதிக வெப்பம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் அனர்த்தம் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்றமை தொடர்பில் இழப்பீடு கோரி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் இலங்கை நாளை சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார். வழக்கை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளபோதும், வழக்கின் பிரதிவாதிகள், கப்பலின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர், நடத்துநர் மற்றும் முகாமையாளர்கள் உட்பட வணிக இருப்பு சிங்கப்பூராக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே பேரழிவு தொடர்பான உரிமைகோரல் நடவடிக்கையை நிறுவுவதற்கு சிங்கப்பூர் பொருத்தமான இடமாக இருக்கும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் துகள்களால் இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு நீண்டகாலமாக ஏற்படும் சேதத்தின் முழு அளவு மற்றும் ஈர்ப்புத்தன்மை குறித்த இந்த நடவடிக்கை, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 மே 20ஆம் திகதியன்று 1488 கொள்கலன்களுடன் சிங்கப்பூர் கொடியிடப்பட்ட கொள்கலன் கப்பல் தீப்பிடித்தது. அதில், 25…
கண்டி – தெல்தொட்டை – பாலுகம பகுதியில் நிவாரணத்தின் அடிப்படையில் அரிசியை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அரிசியை பெற்றுக் கொள்ள சென்ற மக்களிடம் இருந்து தலா 50 ரூபா கட்டணம் அறவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் சமுர்த்தி அதிகாரிகளின் ஊடாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசியை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் முதல் கட்டமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் தெல்தொட்டை – பாலுகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி அரிசி வழங்கப்பட்ட போது அதனை பெற்றுக் கொள்ள சென்றிருந்த மக்களிடம் தலா 50 ரூபா கட்டணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து மற்றும் அதிகாரிகளின் அன்றைய நாளுக்கான வேதனத்தை செலுத்துவதற்கு என தெரிவித்து குறித்த கட்டணம் அறவிடப்பட்டதாக அங்கு அரிசியை பெற்றுக் கொள்ள சென்றிருந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். சுமார் 250 க்கும் மேற்பட்டோரிடம் குறித்த கட்டணம்…
கெகிராவ-பலாகல குடா ஹெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு தின மரதன் ஓட்டப் போட்டியில் பத்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாகல குடா ஹெட்டியாவ கிராமத்தில் நடைபெற்ற திறந்த மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட தனது 15 வயது சகோதரனுக்கு ஆதரவாக இருந்த 10 வயதுடைய தனுக லக்ஷன் என்ற சகோதரனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் பலாகல மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன். மரதன் ஓட்டத்தில் போட்டியாளர்கள் 4 கிலோமீற்றர் தூரத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. போட்டியில் கலந்து கொண்ட தனது 15 வயது சகோதரனின் போட்டிக்கு ஆதரவாக 10 வயது சிறுவன் இருந்துள்ளதுடன், போட்டியின் பாதியை முடித்துக் கொண்டு போட்டியாளர்கள் பலாகல பிரதேசத்தை அடைந்த போது, குறித்த சிறுவனுக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் சிறுவனை கலாவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.…
முல்லைத்தீவு மாவட்டத்தில் அட்சய திரிதியை நாளான இன்று (22) நகைக் கடைகளில் தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை தளம்பல்கள் காரணமாக மக்கள் தங்க நகைகளை கொள்வனவு செய்வதில் முன்னெப்போதும் இல்லாதவாறு ஆர்வம் காட்டவில்லை. உலக சந்தையில் தங்கத்திற்கு ஏற்படும் விலைத் தளம்பல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டில் பணத்தின் பெறுமானத்தில் ஏற்பட்ட்ட வீழ்ச்சி போன்ற காரணிகள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதோடு குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை கடத்தொழில் மற்றும் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். இந்த இரண்டு துறைகளிலும் ஏற்பட்ட பாதிப்பே இவ்வாறான நிலைக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வாடிக்கையாளர்களை அதிகம் கொண்ட சில வர்த்தக நிலையங்களில் தமக்கு போதுமான வியாபாரம் இடப்பெற்றதாகவும் தெரிவித்தனர் .
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயிலில் நேற்று 15 வயதுடைய சிறுவன் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறுகின்றனர். புகையிரதம் செல்லும் போது செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற இவர், ஒஹியா மற்றும் இடல்கஸ்ஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்த சிறுவன் அதே ரயிலில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசார்யா அம்பியூலன்ஸ் வண்டியில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. 5% – 8% வரை கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் என். எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர். கொலைச் சூத்திரதாரிகளை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெடுந்தீவு மாவலி இறங்கு துறையிலுள்ள கடற்படை முகாமுக்கு அருகில் வீட்டில் வசிக்கும் மூதாட்டியொருவர் நெடுந்தீவுக்கு செல்வோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் ,உணவு வழங்குதல் போன்றவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார். இவரது கணவர் 1986ஆம் ஆண்டு…
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)