இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலைகள் 200 ரூபாவால் குறைக்கப்பட்டதுஅதேபோன்ற விலை குறைப்பு ஒன்று ஜூலை மாத ஆரம்பத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, மாதாந்தம் 6 ஆயிரத்து 500 முதல் 7 ஆயிரம் மெற்றிக் டன் வரையிலான பால்மா பயன்படுத்தப்பட்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Author: admin
காய்கறி நுகர்வு சுமார் 40% அதிகரித்துள்ளது. காய்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ளதாலும், சில்லறை சந்தையில் விலை ஸ்திரமாக உள்ளதால் நுகர்வு அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிகின்றனர். சில வருடங்களுக்கு பின்னர் மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் பெறப்பட்ட அனைத்து மரக்கறிகளின் விலையும் ஒரு கிலோ இருநூறு ரூபாவை தாண்டவில்லை எனவும் நேற்று (30ம் திகதி) சுமார் 07 இலட்சம் கிலோ மரக்கறிகள் கிடைத்துள்ளதாகவும் தம்புள்ளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் தொழிற்சங்க செயலாளர் ஐ.ஜி. விஜயானந்தா தெரிவித்துள்ளார் 1 கிலோ பச்சை மிளகாய் 180 ரூபாவும், கத்தரிக்காய் 200 ரூபாயும், கேரட் மற்றும் வெண்டைக்காய் 140 ரூபாயும், பீன்ஸ் 150 ரூபாயும், தக்காளி 100 ரூபாயும், பூசணிக்காய் 45 ரூபாயும் அதிகபட்ச மொத்த விற்பனை விலையாகும் என…
நேற்றைய தினம் (30) நாட்டில் 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி மொத்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,164 என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் சுட்டிக்காட்டுகிறது.
சுனாமி எச்சரிக்கைக்காக கட்டப்பட்ட சுனாமி கோபுரங்களில் 40% செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. சுனாமி பற்றி எச்சரிப்பதற்காக 77 சுனாமி கோபுரங்கள் நாடு முழுவதும் அரசு பேரிடர் மேலாண்மை துறைகளால் நிறுவப்பட்டுள்ளன. இந்த சுனாமி கோபுரங்கள் தற்போது 15 வருடங்கள் பழமையானவை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். . இந்த கோபுரங்கள் பல இயங்கவில்லை என்றும், சுனாமி கோபுரங்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் அமைப்பும் செயல்படவில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். வேலை செய்யாத சுனாமி கோபுரங்களை கையால் இயக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். சுனாமி அபாயம் ஏற்படும் போது சுனாமி கோபுரங்கள் மூலம் மட்டும் மக்களுக்குத் தெரிவிக்க முடியாது என்றார். இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசிகள், ஊடகங்கள், பிரதேச செயலாளர்கள் அலுவலகங்கள், ஒலிபெருக்கிகள், வழிபாட்டுத் தலங்களில் உள்ள மணிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சுனாமி எச்சரிக்கை…
இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மகாவலி கேந்திர நிலையத்தில் கடந்த (27) நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். றோயல் ஆசிய சங்கத்தின் சில வெளியீடுகளின் மூலப்பிரதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உட்பட எந்தவொரு நபருக்கும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மே மாதம் 30 ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது முன்மொழிவுகளை நீதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்க முடியும். அந்த முன்மொழிவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அதற்கு முன்னர் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் அண்மையில் அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் சில தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதன்படி, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…
பல்கலைக்கழகங்களில் கலைப் பீடங்களில் சேரும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கலைப் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதன் முலமாக கலைப் பீட மாணவர்களுக்கு இரண்டு பட்டங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. அதற்கமைய, கார் கழுவுதல், சேவை நிலையங்கள், கடைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுடன் அனைத்து நோக்கங்களுக்கான எரிபொருள் நிலையங்களை அமைக்கவும், QR குறியீட்டு முறைகள் இல்லாமல் எரிபொருள் விநியோகத்தை செயல்படுத்தவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள் மற்றும் சீன அரசுக்கு சொந்தமான சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks-Shell ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சமீபத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த யோசனைகள் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் இந்த யோசனைக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதுடன், இது முக்கியமாக வெளி மாகாணங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. தற்போதுள்ள QR முறையின் கீழ் எரிபொருள் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார் கழுவுதல், சேவை நிலையங்கள், கடைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுடன் அனைத்து நோக்கங்களுக்கான எரிபொருள் நிலையங்களை அமைக்க அடுத்த மாத…
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சட்ட மா அதிபருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கலந்துரையாடலின் அடிப்படையில் அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களம் கோரியுள்ள அறிக்கை தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதன் காரணமாக இந்த கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கோரியதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வேன் கட்டணத்தையும் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வாகன சாரதிகள் சங்கத்தின் (AISVOA) தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த கால மற்றும் நேற்றைய எரிபொருள் விலை குறைப்பினை கருத்திற் கொண்டு, மாதாந்த பாடசாலை வேன் கட்டணத்தை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறாயினும், கட்டண தொகையை மீளாய்வு செய்வது குறித்த தீர்மானம் குழு கூட்டத்தின் பின்னர் நாளை எடுக்கப்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பெற்றோர்கள் சோர்ந்து போயுள்ளதால், அண்மைய எரிபொருள் விலைக் குறைப்பின் பலனை நாங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.