கணவனின் மோட்டார் சைக்கிளுக்கு (ஸ்கூட்டி), ஒவ்வொருநாளும் பெட்ரோல் நிரப்புவதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அவருடைய மனைவி சென்றுவந்துள்ளார். அவ்வாறு சென்றுவந்த மனைவி, எரிபொருள் நிரப்பும் ஊழியருடன் சில நாட்களிலேயே ஓட்டமெடுத்துவிட்டார். இந்த சம்பவம் தென் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளது. புது ஜோடியான அவ்விருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டுள்ளனர். கணவன் வேலைக்குச் சென்றவுடன் வீட்டு வேலைகளை மனைவி கவனித்து வந்துள்ளார். இருவரும் முன்னர் ஆடைத்தொழிற்சாலையில் வேலைச் செய்துவந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இருவரும் ஸ்கூட்டியில் பயணிக்கும் போது, ஸ்கூட்டியை அப்பெண்ணே, செலுத்திச்செல்வார். கணவன் பின்னால் அமர்ந்திருந்து பயணிப்பார். வேலைக்குச் செல்லும் கணவனை, மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வரும் அப்பெண், வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மாலைவேளையில் பஸ் நிலையம் சென்று கணவனை அழைத்துவருவாள். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்கூட்டிக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை அப்பெண்ணுக்கு…
Author: admin
திய அரசாங்கம் முன்வைக்கும் முற்போக்கான திட்டங்களுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் மக்கள் சார்பில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும், எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்கப்படுத்தப்படவுள்ளது. நிறுவனத் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் இன்று முதல் பொதுத்துறை பணியாளர்கள் பணிபுரிய அழைக்கப்படுவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிபொருள் நெருக்கடியை நிர்வகிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியாவசியமற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாளாந்தம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 09ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில், ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் , கைது செய்யப்பட்டவர்களில் 719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளார்.
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் கீழ், மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்புடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகியகாலக் கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒத்துழைப்பின் கீழ், மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தானிய தட்டுப்பாடு காரணமாக அரசுக்குச் சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. திரிபோஷா என்பது இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து நிரப்பியாகும். சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதுடன், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் சோளம் அறுவடை செய்யப் பட்டவுடன் புதிய இருப்புகளை உற்பத்தி செய்ய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மிக சிக்கலான பிரச்சினையாக எதிர்காலத்தில் மாறும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்வதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் செயலாளரான வைத்தியர் ஜெயருவன் பண்டார தெரிவித்தார்.
அவரது சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி வீரரின் நடத்தை/நடத்தையை நிர்வகிக்கும் விதிகளை [(பிரிவு எண் 1 (ஜே)] மீறியதாக கமில் மிஷாராவை வங்கதேசத்தில் இருந்து திரும்ப அழைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் (எஸ்எல்சி) முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ள மிஷாரா, உடனடியாக விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார். அவர் நாடு திரும்பியதும், இலங்கை கிரிக்கெட் ‘அத்துமீறல்கள்’ குறித்து முழு விசாரணை நடத்தும், மேலும் விசாரணையின் முடிவில், வீரர் மீது அடுத்த நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். (SL கிரிக்கெட்)
தரம் 6 (2022) க்கு மாணவர்களைச் சேர்ப்பது குறித்து முடிவெடுப்பதற்காக 2021 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவனங்களை இலங்கைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.