இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புத்தக வெளியீட்டின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தூதுவர், “புனை கதையாகக் கருதப்பட வேண்டிய புத்தகம்” மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய்யைப் பரப்பியதற்காக வருந்துவதாகக் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா 75 ஆண்டுகால வரலாற்றில் இலங்கையின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழுமைக்காக மேற்கொண்ட தியாகங்களைச் தொடர்ந்தும் பராமரித்துச் செல்லும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளரின் கையொப்பங்களுடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வௌியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. சட்டமூலத்தின் சில சரத்துகள் நீதியை நிலைநாட்டும் முறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அது அடிப்படை உரிமைகளுக்கு முரணானது எனவும் குறித்த குழு கூறியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தில் உள்ள குறித்த சரத்துகள் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடுவற்கான சுதந்திரம் பயணங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் சட்டமூலத்தை திருத்துமாறு நீதி அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கோரியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. திருத்தமின்றி…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
ஹங்கேரிய கடனுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் மேம்பாலத் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, ஹங்கேரிய அரசாங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கொஹுவளை மற்றும் கோதம்பே மேம்பாலங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதற்காக ஹங்கேரி அரசு 52 மில்லியன் யூரோக்களை கடனாக வழங்கியுள்ளது.
மருதானை ரயில் நிலையத்தின் 08வது நடைமேடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது. மேலும், பயணிகள் இல்லாமல் பயணித்த புகையிரதம் தடம் புரண்டதாகவும் இதன் காரணமாக களனி வெலி பாதையில் புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கு புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டிகளை வாடகைக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இதனை முன்னோடித்திட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு நேற்று (25) பாராளுமன்றத்தில் கூடியதுடன், போக்குவரத்து அமைச்சு, புகையிரத திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, கொழும்பு மாநகர சபை, மேல் மாகாண வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தன. இலத்திரனியல் டிக்கட் சேவையை ஆரம்பித்தல், பஸ் வண்டிகளுக்கு GSP தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தல், தனியார் போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை பயன்படுத்துவதால் தினசரி சுமார் ஒரு பில்லியன் அளவில்…
கொரிய வேலைகளுக்கான ஒதுக்கீட்டை தாண்டி இந்நாட்டிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொரிய மனிதவள திணைக்களத்தின் பணிப்பாளருடன் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கொரிய வேலைகளுக்கு இந்த நாட்டிற்கு 6,500 வேலை ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை தாண்டி 8,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரிய மொழித் தேர்ச்சி பெற்று தற்போது இணையத்தளத்தில் வேலை எதிர்ப்பார்த்துள்ள, இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் இணையத்தளத்தில் காலாவதியாகவுள்ள உற்பத்தி துறையில் தொழில் எதிர்ப்பார்த்துள்ள 600 பேரை அந்நாட்டு கப்பல் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்படி, இணையதளத்தின் தொழில் பிரிவில் இருந்து பணிப் பிரிவை கப்பல் கட்டுமானப் பிரிவுக்கு மாற்றி இந்த தொழிலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.…
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லக்கூடாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லும் பெண்களின் குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த வருடம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதனை மேலும் வினைத்திறனுள்ளதாக்கும் வகையில், மார்ச் 31ஆம் திகதி புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, 45 வயதை பூர்த்தி செய்யாத அனைத்து பெண்களும் பணிக்காக வெளிநாடு செல்லும் பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது தொடர்பான அறிக்கையை பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தட்டுப்பாடு நிலவும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு கல்வி வௌியீட்டு திணைக்களத்திலிருந்தே பாடப்புத்தகங்கள் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன. பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களும் இவ்வாறு விநியோகிக்கப்படுவதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை 33 மில்லியன் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அதற்காக 16,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட வெளிநோயாளர் கட்டடத் திட்டம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhongனால் இந்த கட்டடம் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று (25) கையளிக்கப்பட்டுள்ளது. 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டம் சுமார் 50,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த திட்டமானது தினசரி 6,000 வெளிநோயாளிகளுக்கு வசதிகளை வழங்குவதுடன், உள்ளூர் மருத்துவ இடர்பாடுகளை போக்க பெரிதும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெளிநோயாளர் கட்டடமானது நாட்டின் சுகாதாரத் துறைக்கு உண்மையில் தேவைப்படும் திட்டமாகும் என தெரிவித்துள்ளார். இதேவேளை சீன தூதுவர் இது குறித்து தெரிவிக்கையில், சீன அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்துள்ளது. இதனால் இருதரப்பு உறவுகளும் வலுப்பெறும். கோவிட் தொற்றுநோய்களின் போது சீனா இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை…