பௌத்த துறவிகள் மற்றும் இந்து மதகுருமார்கள் அடங்கிய குழுவொன்று, சவூதி அரேபியா இராச்சியத்திற்கு ஒரு மத மன்றத்திற்காக விஜயம் செய்துள்ளது, இது மற்ற மதத் தலைவர்கள் இராச்சியத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்ததைக் குறிக்கிறது. இலங்கையின் மகாபோதி சங்கத்தின் தலைவரும், ஜப்பானுக்கான பிரதம சங்க நாயக்கருமான வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவொன்று, ஜப்பான் பிரதம பூசாரி-லங்காஜி ஆலயம், ஜப்பான் மற்றும் பிரதம பூசாரி-சாஞ்சி சேத்தியகிரி விகாரை, இந்தியா, என ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை குருக்கள் ராமச்சந்திர அய்யர் மற்றும் திரு. கொஸ்வத்தே பாலித தேரர் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்தார். முஸ்லீம் உலக லீக்கின் பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்களின் அமைப்பின் தலைவருமான ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸாவின் அழைப்பின் பேரில், “பொதுவான…
Author: admin
இலங்கையில் தற்போது அத்தியாவசியமான சுப்பர் டீசல் மற்றும் ஆட்டோ டீசல் கையிருப்பில் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பான அறிவிப்பை வழங்கிய அமைச்சர், இன்று மாலைக்குள் நாட்டிலுள்ள 1190 முக்கிய எரிபொருள் நிலையங்களுக்கும் டீசல் விநியோகத்தை நிறைவு செய்வதற்கு அமைச்சு உத்தேசித்து வருவதாக தெரிவித்தார். “அடுத்த சில வாரங்களுக்கு தேவையான டீசல் கையிருப்பு விநியோகத்தை தொடர நாங்கள் உத்தேசித்துள்ளோம்” என்று அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பெற்றோல் விநியோகம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, இலங்கையில் இன்னும் தேவையான பெற்றோல் இருப்பு இல்லை எனவும், நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி முதல் பெற்றோலுடன் கூடிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் பணம் செலுத்துவதற்கு தேவையான டொலர்களை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் அரசாங்கத்தினால் அதனை விடுவிக்க முடியவில்லை எனவும்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகளை நேற்று (17) நள்ளிரவு முதல் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலை காரணமாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். விதிகளை மீறும் தரப்பினர் தொடர்பில் ஏதேனும்…
இன்று (18) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 40 நிமிட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும். ⚪ *ABCDEFGHIJKL ▪️ PQRSTUVW* 📌 *மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்.* 📌 *பி.ப. 5.00 – இரவு 10.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்* ⚪ *MNO | XYZ* 📌 மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள் ⚪ *CC* 📌 *மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்.* *முதலாம் கட்டம்* 📌09:00 AM -11:00 AM ➖ D, E, F 📌11:00 AM – 01:00 PM…
முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் விசாரணை திணைக்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 ஆம் திகதி காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மற்றும் அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காலி முகத்திடல் பகுதியில், கோட்டா கோ கம அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய அரசியல் வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி சட்டத்தரணிகள் சங்கத்தினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (17) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. ஒரு நாட்டிற்கு இரண்டு சட்டங்கள் தேவையில்லை என்று கூறிய அவர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி ,பல டீல்களுடன் அரசாங்கத்தை அமைக்கும் இந்த செயற்பாட்டை எதிர்ப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். ஆகவே அரசாங்கத்திலோ அல்லது அதன் வேலைத்திட்டங்களிலோ தாங்கள் ஒரு தரப்பினராக இருக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் , 21 வது திருத்தம் போன்ற முற்போக்கான நடவடிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவினை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மேலும் குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேசயம், இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் அமைச்சுப் பதவிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியும் கலந்துரையாடவுள்ளனர். இதன்படி , சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பல உறுப்பினர்கள் நேற்று பிரதமருடன் கலந்துரையாடியுள்ளனர். மேலும் பிரதமருக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து புதிய அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.
வழமையான நடைமுறைக்கமைய பஸ் சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இதன்படி, பஸ்களுக்குத் தேவையான எரிபொருளை வரிசையில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.