நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தளம் மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் பள்ளி மாணவர்களுக்கு இலங்கை கடற்படையினர் 24 மே 2022 அன்று போக்குவரத்து உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்தனர். புத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS தம்பபன்னியின் வெள்ள நிவாரண குழுக்களால் நிவாரண நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கடற்படையினர் வெள்ள அபாய பகுதிகளில் நிவாரணக் குழுக்களை துரிதமாக ஈடுபடுத்தியுள்ளனர். அதன்படி, மே 24 ஆம் திகதி அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, புத்தளம் சாஹிரா கல்லூரி மற்றும் இந்துக் கல்லூரியின் சாதாரண தர பரீட்சார்த்திகள் பரீட்சை கேன்டர்களில் இருந்து அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பாக புறப்படுவதை கடற்படை குழுக்கள் உறுதி செய்தன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிக் கோரிக்கைக்கு இணங்க கடற்படையினர் மற்றுமொரு நிவாரணக் குழுவை மே 24…
Author: admin
பேரின்ன பொருளாதார கட்டமைப்பினை பேணும் வரை இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான எந்தவித திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை மக்கள் தொடர்பில் உலக வங்கியானது அக்கறையுடன் செயற்படுகின்றது. எனினும் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதில் உலக வங்கியானது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவியினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில், உலக வங்கியின் இவ்வாற◌ான அறிவிப்பு பொருளாதாரத்தில் மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி , 20 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரதமர் ரணில் இதுவரை நிதி அமைச்சராக பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்தார். அந்த நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டுள்ள அனைத்து எரிபொருளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான அதிகளவான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை முறையாக மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார்.
மொஹமட் நஷீட் இலங்கையில் தங்கியிருந்து மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தவர்கள் பாதுகாப்பாக நாட்டிலிருந்து வௌியேறுவதற்கான பொறிமுறையை தயாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதென The Maldives Journal இணையத்தளம் இன்று செய்தி வௌியிட்டுள்ளது.
நேற்று இரவு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதன் பின்னர் அம்பத்தலே எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ட்வீட் செய்துள்ளார். விலை மாற்றம் வருவதை அறிந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். CPC அதிகாரிகள் இன்று காலை பொதுமக்களுக்கு பழைய விலையில் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த பழைய எரிபொருட்களை விற்பனை செய்ததாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. *மேலதிக விவரங்கள் கீழே,* 0️⃣1️⃣வசந்தா பெரேரா – நீதி, சிறைச்சாலை விவகாரம், அரசியலமைப்பு திருத்தம் 0️⃣2️⃣ஆர்.எம்.ஐ ரத்நாயக்க – கடற்றொழில் 0️⃣3️⃣எம்.என் ரணசிங்க – கல்வி 0️⃣4️⃣எஸ். ஹெட்டியாராச்சி – பொதுப் பாதுகாப்பு 0️⃣5️⃣ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க – கைத்தொழில் 0️⃣6️⃣ஆர்.டபிள்யூ. ஆர் பிரேமசிறி – நெடுஞ்சாலைகள் 0️⃣7️⃣யூ.டி.சி. ஜயலால் – நீர்பாசனம் 0️⃣8️⃣எம்.பி.ஆர் புஸ்பகுமார – விவசாயம் 0️⃣9️⃣எஸ்.டி. கொடிகார – வர்த்தகம், உணவு பாதுகாப்பு 1️⃣0️⃣மொன்டி ரணதுங்க – நீர் வழங்கல் 1️⃣1️⃣ஆர்.எம்.சி.எம். ஹேரத் – வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி 1️⃣2️⃣எம்.பி.டி.யூ.கே மாபா பதிரண – எரிசக்தி, மின்வலு 1️⃣3️⃣அனுராத விஜேகோன் – விளையாட்டு மற்றும் இளைஞர்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தற்போது இடம்பெற்று வரும் நிலையில் தனது மைத்துனருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பிரதேச பரீட்சை நிலையமொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தனது மைத்துனர் சார்பில் தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் சந்தேக நபர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பரீட்சார்த்தி மற்றும் அவருக்காக தோற்றிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நாளையும் (25) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே நாளைக்குள் எரிவாயு வரிசைகளில் நிற்க வேண்டாம் என நுகர்வோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்றைக்குள் (24) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என அந்நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு (LP) இரண்டு ஏற்றுமதிகளுக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக Litro தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மொத்தம் 7,500 மெட்ரிக்தொன் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 3,500 மெட்ரிக்தொன் முதல் ஏற்றுமதி வியாழக்கிழமை (26) கொழும்பை வந்தடைய உள்ளதாகவும் அவர் கூறினார்.