திருகோணமலையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை கடற்பகுதியில் சல்லி, சம்பல் தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (23) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படைக் குழு ஒன்று நிலாவெளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப் பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த வர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Author: admin
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. அதன்படி, புதிய எரிபொருள் விலைகள் வருமாறு: பெட்ரோல் ஆக்டேன் 92 – ரூ. லிட்டருக்கு 420 பெட்ரோல் ஆக்டேன் 95 – ரூ. லிட்டருக்கு 450 ஆட்டோ டீசல் – ரூ. லிட்டருக்கு 400 சூப்பர் டீசல் – ரூ. லிட்டருக்கு 445 எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர விடுத்துள்ள அறிக்கை இன்று அதிகாலை 3 மணி முதல் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் விலைகளை திருத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. விலை திருத்தம் இறக்குமதி, இறக்குதல், நிலையங்களுக்கு விநியோகம் மற்றும் வரி ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது. இலாபங்கள் கணக்கிடப்படவில்லை மற்றும் சேர்க்கப்படவில்லை. அதற்கேற்ப போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது மாதந்தோறும் சூத்திரம்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விரையில் சாதகமான நிலையை எட்டும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகள் வெற்றியடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசத்துடான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் அடுத்த 12 மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை அடையும் சாத்தியப்பாடுகள் தென்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி இன்று தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாடு மீண்டும் ஸ்திரமான நிலைக்கு அடைந்து ஜனநாயகத்திற்கு மதிக்கும் நாடாக மாற வேண்டியது கட்டாயமாகும் என தெரிவத்துள்ளார். அமைச்சரவையில் சமர்பித்து அதற்கான அங்கீகாரம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாராளுமன்றத்திலேயே உள்ளன. மேலும் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பர்கள் என நாம் நம்புகின்றோம் என ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் நியூஸ்வயருக்கு தெரிவித்தார். “அமைச்சரவை அமைச்சர்கள் இப்போது கட்சித் தலைவர்களுக்கு முன்மொழிவை பரிந்துரைத்துள்ளனர். இது அடுத்த வாரம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும்” என்று அமைச்சர் மேலும் கூறினார். 21வது திருத்தம், ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தை பலப்படுத்திய 19வது திருத்தத்தை இரத்து செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கிய 20வது திருத்தத்தை ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவற்றை சுயாதீனமாக்குவதற்கும் முயற்சிக்கிறது. இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என மூத்த அமைச்சர் மேலும் தெரிவித்தார். (நியூஸ் வயர்)
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜகத் அல்விஸ் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளை (24) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே நாளைக்குள் எரிவாயு வரிசைகளில் நிற்க வேண்டாம் என நுகர்வோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LP) இரண்டு ஏற்றுமதிகளுக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ தலைவர் விஜித ஹேரத் இன்று தெரிவித்துள்ளார். மொத்தம் 7,500 மெட்ரிக்தொன் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 3,500 மெட்ரிக்தொன் முதல் ஏற்றுமதி வியாழக்கிழமை (26) கொழும்பை வந்தடைய உள்ளதாகவும் அவர் கூறினார்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் 50 வீத ஊழியர்களே சேவைக்கு சமூகளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், அவசரப்பிரிவில் நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுக்கு தேவையான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் எந்தவொரு அரச மருத்துவமனைகளிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி தீவிர இதய நோய்க்கான மருந்துகள், புற்றுநோயாளிகளுக்கான மருந்துகள், நீரிழிவு நோய்க்கான தடுப்பூசிகளான இன்சுலின் போன்றவையே இவ்வாறு அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த 25 மருந்துகளுக்கும் தனியார்துறை மருந்தகங்களிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு மட்டுமின்றி, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் திறமையின்மை மற்றும் மோசமான நிர்வாகமும் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என சுகாதார அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் 10,000 உரங்கள் வழங்காவிட்டால் அரிசியை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ரூ.3,400க்கு விற்க வேண்டியிருக்கும் என உரம் மற்றும் பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளது. அதில் 40,000 மெட்ரிக் தொன் நெல் சாகுபடிக்கும் 20,000 மெட்ரிக் தொன் மற்ற பயிர்களுக்கும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நெல், மரக்கறிகள், பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பயிர் விதைகளுக்கான தேவை போதுமானதாக இல்லை என கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. விவசாயத் துறையில் விதைத் தட்டுப்பாடு ஒரு முக்கியப் பிரச்சினையாக இருப்பதால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விவசாய அமைச்சின்…