இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி தற்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களை பெற்றது. ஆட்டநேர முடிவில், நஜ்முல் ஹொசைன் 25 ஓட்டங்களுடனும் ஸகீர் ஹசன் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். இந்தியக் கிரிக்கெட் அணியின் 513 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில், பங்களாதேஷ் அணி, 471 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. சட்டோகிராம் மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 404 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, புஜாரா 90 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், தைஜூல் இஸ்லாம் மற்றும் மெயிடி ஹசன்…
Author: admin
பாடசாலை வீரர்களுக்கான விருது வழங்கும் தேசிய நிகழ்வான Observer – SLT Mobitel school cricketer of the year 2022இல் சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதை சாருஜன் சண்முகநாதன் தனதாக்கியுள்ளார். புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரராக சாருஜன் சண்முகநாதன் காணப்படுகின்றார். இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் குட்டி சங்கா எனவும் சாருஜன் சண்முகநாதன் அழைக்கப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் சிலாகுர் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மத்திய சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுலா பகுதியான படாங் கலி என்ற இடத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்படும்போது 92 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாக மலேசிய தேசிய பேரிடர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மண்சரிவில் சிக்சி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 79 பேர் மாயமாகியுள்ளனர். இதற்கிடையில், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் வரை மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிலாங்குர் உட்பட பல மாநிலங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நிலக்கரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இந்த நிலை ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகாரசபை நிர்ணயித்திருந்தது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பெப்ரவரி 06 ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (15) தீர்மானித்ததையடுத்து அதுவரை 50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் திறனை நுகர்வோர் விவகார அதிகாரசபை தற்காலிகமாக இழந்ததையடுத்து, உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான விலையை நிர்ணயித்துள்ளனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது. பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும். பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது என்பதால் பாட விடயதானங்கள் அடங்கிய பகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்த காலப் பகுதியில் அவரது ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இன்று (16) சுதேவ ஹெட்டிஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, வெளிநாட்டு தூதுகுழுவிற்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸ் கட்டளையை மீறி வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
“Jamb start srilanka” 2பில்லியன் பெருமதியான தகவல் தொழில்நுட்ப உயர்கல்வி புலமைபரிசில்கள் வழங்கிவைப்பு. “Jumb start Srilanka”வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேண்டுகோலுக்கு அமைய “Jumb start Srilanka” வேலைத்திட்டத்தின் கீழ் ரொட்டரி கழகத்தினால் 500 இளைஞர் யுவதிகளுக்கு புலமை பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது. இப்புலமை பரிசில் திட்டமானது தகவல் தொழில்நுட்ப துறையில் நான்கு வருட உயர்கல்விக்காக சுமார் 2பில்லியன் ரூபா பெருமதியான புலமை பரிசில்கள் நாடு பூராகவும் தெரிவு செய்யப்பட்ட 500 இளைஞர் யுவவழங்கி யுவதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் இதன் மூலம் பிளீப்பைன் நாட்டின் பல்கலை கழகத்தில் இத்துறைக்கான உயர்கல்வியினை தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 14.12.2022(வியாழன் )அன்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு ரொட்டரி கழக சர்வதேச தலைவி திருமதி. ஜெனிபர் ஜோன்ஸ் தலைமையில் நடைபெற்றதோடு விளையாட்டு மற்றும்…
அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுமக்கள் சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாதென்றும் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே சட்டங்கள் மற்றும் சட்டக்கோவைகளை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பதுளை மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (15) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது, இப்பகுதிகளில் உள்ள பைனஸ் மரங்களை அகற்றுவதற்கு முன்னர் அது தொடர்பிலான விஞ்ஞானபூர்வமான அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். ஆங்கிலேயர்கள் இந்நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பைனஸ் பயிர்ச்செய்கை இருக்கும்போதே தான் தேயிலையையும் பயிரிட்டனர். எனவே தவறான கருத்துக்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இதனால் பைனஸ் பயிர்ச்செய்கையை அகற்றுவதற்கு…
உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமே எதிர்கால சந்ததியினருக்கான நம்பகமானதொரு வழியை உருவாக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (15) நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில்” கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். உற்பத்தித்திறன் எமக்கு சவாலாக உள்ளது. ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்தைப் போன்று, உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்டே எதிர்கால சந்ததியினருக்கான நம்பகமான வழியை உருவாக்க முடியும். எமது நாட்டின் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும். அந்தச் சவாலை வெற்றிகொள்வதில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்களை அடையாளம் காண்பது முக்கியமானதாகும். புதிய தலைமுறை இளைஞர்களின் படைப்பாற்றலுக்கு நாம் இடமளிக்க வேண்டும். இந்த மாற்றத்தின் மூலம் புதிய விடயங்களை உருவாக்க சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாரம்பரிய கோணத்தில் இருந்து விலகி சமூகத்தையும் நாட்டையும் புதிய யுகத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் மக்களின் உற்பத்தித்திறனை அங்கீகரித்து இவ்வாறு கௌரவிப்பது ஒரு…