பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பண்டாரகம பொலிஸார் எமது கெப்பிட்டல் செய்தி பிரிவுக்கு இதனை குறிப்பிட்டனர். மேலும், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுமியின் உடல் வைக்கபட்டுள்ளது. பண்டாரகம – அட்டுலுகம பகுதியை சேர்ந்த 9 வயதுடைய சிறுமி பாத்திமா ஆயிஷா நேற்று முன்தினம் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் புதையுண்ட நிலையில் சடலம் நேற்று பிரதேச மக்களால் கண்டெடுக்கப்ட்டது. இதனைத் தொடர்ந்து, சடலம் பாணதுறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்க்படவுள்ளன. இதேவேளை, சிறுமியின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் வகையில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Author: admin
பண்டாரகம, அட்டாலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பொலிஸ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக குழு தொடர்ந்தும் செயற்படும் என அதன் தலைவர் கலாநிதி உதய குமார அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, பண்டாரகம, அட்டாலுகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அவரது சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (29) இடம்பெறவுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இலங்கையில் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் Dr. Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தொடர உதவுவதில் WHO கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டின் போது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளுடன் டொக்டர் டெட்ரோஸ் மேலும் கலந்துரையாடியிருந்தார். இதேவேளை, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியால் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு சுமார் 30% பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டு பகுதியில் கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி இருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று (27) மாலை கைதுசெய்துள்ளார்கள். ஓட்டுசுட்டான் தொட்டியடிப்பகுதியில் வீதிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் உந்துருளியில் சந்தேகமான முறையில் சென்ற கணவன் மனைவி இருவரையும் சோதனை செய்தபோது ஒரு கிலோ 360 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்தி செல்ல முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது 40 அகவையுடய குடும்பபெண்டும் அவரது கணவரான 49 அகவையுடைய முத்துஜயன் கட்டினை சேர்ந்த இருவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
மே 9ஆம் திகதி நடைபெற்ற கோட்டகோகம மற்றும் மைனகோகம அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலும் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சரவை அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரும் எதிர்வரும் புதன்கிழமை (1) ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளை (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களுடன் வடரெகா சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காகவே சேனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார். மேல்மாகாண பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்…
அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். “ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.” என ஜனாதிபதி இன்று ட்வீட் செய்துள்ளார். 9 வயது ஆயிஷா நேற்று காலை முதல் காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது, இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டதாக நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஒக்டேன் 95 பெற்றோல் வழங்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. சில முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ஒக்டேன் 95 பெற்றோலை சேகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இலங்கையில் 6,142 மெட்ரிக் டன் ஒக்டேன் 95 பெற்றோல் மட்டுமே காணப்பட்டது.
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துவிட்டனர். தளபதி 67 – தளபதி 68 இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணைந்து நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காக தான், தளபதியின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படதிற்கு பின் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார்? அண்மையில் பிகில் பட ராயப்பன் கதாபாத்திரம் ஒரு படமாக வெளிவந்தால் எப்படி இருக்கும்? என்று கேட்டு, அமேசன் ட்விட்டரில் பதிவு செய்திருந்தது. இதற்கு அட்லீ “செஞ்சுட்டா போச்சு” என்று பதிவு செய்திருந்தார். விஜய் நடிக்கும் ‘ராயப்பன்’ இதனை வைத்து பார்க்கும் பொழுது, தளபதி 68 படத்தை அட்லீ இயக்கப்போகிறார் என திரை வட்டாரத்தில் அதிகம் பேசத்துவங்கிவிட்டனர். மேலும், சமீபத்தில் வெளிவந்த செய்தியை வைத்து பார்க்கும்…
மின் கட்டணத்தனை மறுசீரமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் கட்டணங்களை திருத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மற்றும் மூதூர் பிரதேசங்களிலே குறித்த மோட்டார் குண்டுகள் நேற்று (27) மாலை மீட்கப்பட்டுள்ளன. புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13ஆம் கட்டை காட்டு பகுதியில் மோட்டார் குண்டொன்று காணப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் மோட்டார் குண்டை மீட்டுள்ளனர். இம் மோட்டார் குண்டு 60 மில்லி மீட்டர் நிறை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மோட்டார் குண்டை செயலிழக்கச் செய்வதற்கு திருகோணமலை நீதிமன்றில் அறிக்கையை பெற உள்ளதாகவும் இதனையடுத்து மோட்டார் குண்டை செயலிழக்க செய்ய உள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி-பாரதிபுரத்தைச் சேர்ந்த அப்துல்பரீட் நஜாத் என்பவர் தனது காணியில் மோட்டார் குண்டு ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸார் மோட்டார் குண்டை…