இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பரந்த பொருளாதார கொள்கையின் முதற்கட்டமாக தேசிய வலுவூட்டல் ஆணைக்குழு நிறுவப்படவுள்ளது. அது தொடர்பான அனுபவத்தை பறிமாறிக் கொள்வதற்காக ஆணைக்குழுவின் செயற்பாட்டாளர்கள் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் அவுஸ்திரேலிய தேசிய வலுவூட்டல் ஆணைக்குழுவுடன் பணியாற்றவுள்ளனர்.
Author: admin
மற்றுமொரு நிலக்கரி கப்பல் இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நாட்டின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இருப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இலங்கைக்கு தேவையான நிலக்கரி இருப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் ஹேஷான் சுமனசேகர தெரிவித்துள்ளார். இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை எவ்வித பிரச்சினையுமின்றி இயக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுவரையில் 29 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளது என்றும் இன்றைய தினம் 30 ஆவது கப்பல் இலங்கைக்கு வந்தடையும் என்றும் ஹேஷான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய வகை காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மே பா(FA) லுவன்ஸ் பல்கலைக்கழகத்திலும் சீன ஆய்வு நிறுவனத்திலும் ஆய்வாளராக செயற்பட்ட கலாநிதி அசெனி எதிரிவீர உள்ளிட்ட ஆய்வாளர் குழாம் மேற்கொண்ட பரிசோதனையில் புதிய காளான் வகை கண்டறியப்பட்டுள்ளது.
கொள்ளுபிட்டி, ப்ளவர் வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து 71,000 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் அங்கு எரிபொருள் இயந்திரத்திற்கு அருகில் இருந்த பணப் பெட்டகத்தில் இருந்து இவ்வாறு பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். சிசிடிவி கமெரா காட்சிகளின் ஊடாக மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு 10 இல் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சந்தேக நபர்களும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட கொள்ளையடித்த பணத்தில் 45,000 ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்பவர் எனவும் மற்றையவர் மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பவர் எனவும் பொலிஸார் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை…
இலங்கை மின்சார சபை (CEB) மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் புதிய மின்சார ஆணைக்குழுவினால் PUCSLக்கு பதிலாக மாற்றப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. உலகிலுள்ள பல நாடுகளில் FM அலைவரிசைகளின் பயன்பாடு குறைவடைகின்ற நிலையிலேயே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு தாமரை கோபுரத்தின் ஊடாக வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு முதற்கட்டமாக வானொலி டிஜிட்டல் சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. FM அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு, வானொலி டிஜிட்டல் சேவை VHF அலைவரிசை ஊடாக ஒலிபரப்பப்படவுள்ளது. டிஜிட்டல் வானொலி சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான முதலீட்டை, உள்நாட்டு முதலீட்டின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பயன்படுத்தப்படும் FM வானொலிகளை நவீனமயப்படுத்த மேம்பாட்டு நவீன கட்டமைப்பொன்று பொருத்தப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் FM அலைவரிசைகள் முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை 54 வானொலிகளுக்கு FM அலைவரிசைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. டிஜிட்டல் வானொலி சேவைக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட…
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த அரச உத்தியோகஸ்தர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தொகுதிக்கு வெளியே வேறு பகுதியில் தற்காலிகமாக பணிகளை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். அதன்படி, அவர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாதவச்சி பிரதேசத்தைச் 27 வயது கணவனும், 23 வயதான அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் தொடர்பாக மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலொன்றின்போது பலத்த காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி இளைஞர் கடந்த 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்க வர்த்தகர்களின் தகவல்படி இன்று(01) பவுணுக்கு 2000 ரூபாய் அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 175,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 160,875 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் எதிர்கால நிலைமை தொடர்பாக இலங்கை தங்க நகை வர்த்தகர்கள் தங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் வழங்கிய செவ்வி கீழே தரப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் (28) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம் சற்று உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று அறிக்கையின் படி, கடந்த வாரம் 313.92 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி இன்று 313.73 ரூபாவாக குறைந்துள்ளது. அதேநேரம், 328.75 ரூபாவாக காணப்பட்ட விற்பனை பெறுமதியானது 328.41 ரூபாவாகவும் குறைந்துள்ளது.