Author: admin

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா இன்று உடலநலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் 1980-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் மனோபாலாவும் ஒருவர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ஆகாய கங்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். சிவாஜி, ரஜினி துவங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். மனோபாலாவின் திடீர் மரணம் திரயுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறி வருகின்றனர். https://chat.whatsapp.com/CuYfyihZHw75CkOszISQzY

Read More

நாட்டில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தாதோருக்காகச் சுகாதார அதிகாரிகள் விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளனர். அந்த அறிவிப்பில் அவர்கள், முழுமையான கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களின் இருந்து சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர். தடுப்பூசி அளவுகளை முழுமையாக பெறாத 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எவரும் குறித்த கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

Read More

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் எதிர்காலத்தில் விசேட பொதி ஒன்றை அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இதன்படி, வௌிநாட்டு முதலீட்டுக்களுக்கான அரசாங்க நிதி மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்ட சலுகைகளின் பொதி ஒன்று விரைவில் முன்வைக்கப்படவுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு போதிய ஊக்குவிப்புக்கள் இல்லாதது பாரிய பிரச்சினை எனவும், இவ்வளவு இயற்கை வளங்கள் இருந்தும் அது முறையாக மேற்கொள்ளப்படாமை தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் 6ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக 3ஆவது சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழவுள்ளனர். எவ்வாறாயினும், இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில்…

Read More

புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை ஊக்குவிக்கும் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களுக்கான கட்டண அறவீடு குறித்த புதிய சூத்திரமொன்று அறிமுகம் செய்யப்படவுதாகவும், புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முதன்மை கட்டணம், திறைசேரி பத்திர கட்டணம் மற்றும் பணவீக்கம் போன்ற காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இந்த சூத்திரம் உருவாக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 20 ஆண்டுகளுக்கான திட்டமாக இது அமையப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி சினிமா பூங்காவை அரச-தனியார் பங்காளித்துவ முறையின் கீழ் நிர்வகிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 27.02.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

இலங்கையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேருக்கு மலேரியா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மலேரியா தொற்று பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது. 14 ஆண்டுகளின் பின்னர், இந்த ஆண்டு, பேருவளை பகுதியைச் சேர்ந்த ஒருவர், மலேரியா தொற்றினால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபிரிக்க நாட்டுக்கு சென்று திரும்பியிருந்த நிலையில், அவருக்கு மலேரியா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, கடந்த 30 ஆம் திகதி மலேரியா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மலேரியா பரம்பல் குறித்து யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

Read More

இலங்கையில் கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் கொவிட் தொற்றுக்கு இலக்கான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். 30 ஆம் திகதி 7 புதிய கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதுடன், அன்றைய தினம் ஒரு கொவிட் மரணமும் பதிவாகியுள்ளது. அத்துடன், நேற்று முன்தினம் (மே 1) 6 தொற்றாளர்களும், நேற்று 6 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். இதன்படி, நேற்றிரவு நிலவரப்படி, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரத்து நூற்று எண்பத்து மூன்றாக (672,183) உயர்வடைந்துள்ளது. இந்த வெசாக் வாரத்தில் பெரும்பாலானோர் தமது ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதனால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி அனைவரும் முகக்கவசம் அணிவது சிறந்தது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த…

Read More

Litro LP Gas 12.5kg சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது மற்றும் புதிய விலை ரூ.3,638 ஆக இருக்கும். 5 கிலோ சிலிண்டர் ரூ.40 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.1,462; 2.3 கிலோ சிலிண்டர் ரூ.19 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.681 ஆக உள்ளது.

Read More