அக்குரணை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என போலியான தகவலை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மௌலவி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் நேற்று(04) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சந்தேகநபர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின்கீழ் இயங்கும், 118 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு, அண்மையில் அழைப்பை ஏற்படுத்திய இஸ்திக் மொஹமட் என்ற 21 வயதான குறித்த மௌலவி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவு நாளில், ஏழு கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக போலியான தகவலை வழங்கியுள்ளார். இதையடுத்து, ஹரிஸ்பத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த அவர், இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Author: admin
நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.2% அதிகரித்து ஏப்ரல் இறுதியில் 2.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. மார்ச் மாதத்தில் வெளிநாட்டு நாணய கையிருப்பு 2.69 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்த சொத்து கையிருப்பில் சீன மக்கள் வங்கி பரிவர்த்தனை முறை மூலம் வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது திறைசேரியை சார்ந்து இயங்கும் நிறுவனமாக மாறாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பிரகாரம், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அதிகார சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. 2019-2020 ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம் (ஏ-9) மற்றும் உயர்தரம் பல்கலைக்கழகத்திற்கு சித்தியடைந்து, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் ஊழியர்களின் மகள்கள் மற்றும் மகன்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று (03) கலந்துகொண்ட போது தலைவர் இதனைக் குறிப்பிட்டார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 5 ஆம் அண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைக்கு மாதம் 300 ரூபா வீதம் ஒரு குழந்தைக்கு…
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கட்டுநாயக்க பிரதேசத்தில் கடும் மழை பெய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி, முதல் விமானம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து 15 விமான ஊழியர்களுடன் வந்துள்ள நிலையில் நேற்றிரவு 11.35 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கபபட்டுள்ளது. விமானத்தில் உள்ள பயணிகளும் ஊழியர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பஸ் மூலம் அழைத்து வரப்படுவதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், மாலைத்தீவின் மாலேயில் இருந்து வந்த விமானம் ஒன்றும் இன்று அதிகாலை 12.02 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, இன்று (5) மற்றும் நாளை (6) இவ்வாறு சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கைதிகளின் உறவினர்கள் அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளை பொதிகளை கைதிகளுக்கு வழங்க முடியும். சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு புத்தரின் போதனைகளின்படி ஒற்றுமையுடன் அணிதிரளுமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெசாக் தின வாழ்த்துச் செய்தியை வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வெசாக் செய்தி கீழே,“மூன்று ரத்தினத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் புன் போஹோ புத்த நாட்காட்டியில் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும் மற்றும் புனித முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாள் சித்தரின் பிறப்பு, ஸ்ரீ சம்புத்த மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் பெரிய திருவிழாக்களை நினைவுகூருகிறது மற்றும் மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய தொண்டு பணிகளை மேற்கொள்வதன் மூலம் புத்தரின் போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாகும். நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சவாலான நேரத்தில், புத்தரின் காலத்தால் அழியாத தத்துவம் ஆறுதலாக மாறியுள்ளது. எனவே, இக்கட்டான காலகட்டத்தைக் கடந்து இயல்பு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான சவாலை முறியடிக்க, புத்தர் கூறியது போல் ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவது அவசியம்.…
வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று (05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று (04) முதல் விசேட பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சிலஇடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப்பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
யாழ்ப்பானம் வடமராச்சி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முன்பாக, அமைதியான முறையில் போராட்டம் நடத்த மல்லாகம் நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரியும். குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும், நேற்று முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தநிலையில், குறித்த போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு. தெல்லிப்பளை மற்றும் பலாலி காவல்துறையினர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தன. இதற்கமைய, களத்திற்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்த மல்லாகம் நீதிவான், தையிட்டி விகாரைக்கு முன்பாக, அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இதேநேரம், யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட…
புதிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் முதல் இரண்டு குழுக்களுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தலா 150% மூன்றாக பிரிக்கப்பட்டு புதிய வௌிநாட்டு எண்ணெய் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய விநியோகத்தர்களுக்கான சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளை ஒதுக்குவது, பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்களை வகைப்படுத்துவது, புதிய உடன்படிக்கைகள், விலை சூத்திரம், புதிய விநியோகத்தர்களுக்கான நன்மைகள், சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளுக்கு கிடைக்கும் வருமானம், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது. சீனாவின் Sinopec, அமெரிக்காவின் R.M.Parks, அவுஸ்திரேலியாவின் United Petroleum ஆகிய மூன்று நிறுவனங்கள் இலங்கையின் பெட்ரோலிய சந்தைக்குள் பிரவேசிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகிக்கும் தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வீதம் 450 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்கவுள்ளதுடன், புதிதாக…