கல்கிசையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்தவர் 31 வயதான படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பின்வரும் மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி. கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு, சரிவுகள், பாறை சரிவுகள், வெட்டுக்கள் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பள்ளிகள் மற்றும் டியூஷன் வகுப்புகள் ஆன்லைன் கற்பித்தலை நாடுவதால், அதிகமான குழந்தைகள் இணையத்தில் வெளிப்படுவதால், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. குழந்தைகளுக்கு ஏற்படும் இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் தனுஜா திஸாநாயக்கவிடம் “நியூஸ் கட்டர்” இந்த கேள்வியை எழுப்பியது.
உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்கள் பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. “உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் பங்களிப்பு வழங்கப்படும், மேலும் இது உணவு உதவி, இலக்கு பணப் பரிமாற்றங்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வவுச்சர்களை விநியோகித்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்” என்று தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணிகள் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரித்து, பல குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சர்வதேச சமூகம் தனது முயற்சிகளை முடுக்கி விடுவதும் இலங்கைக்கு தனது அசைக்க முடியாத ஆதரவைக் காட்டுவதும் மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இந்த அவசர உதவி நடவடிக்கை இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய வலுவான கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள் வருகிறது. கடந்த ஏப்ரலில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக வழங்கப்பட்ட…
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருவரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவுகளின் விலைகளும் 20% வரை குறைக்கப்படும் வாய்ய்புக்கள் உண்டு என தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார். எரிவாயு விநியோகமும் உரியமுறையில் விநியோகிக்கப்படும் நிலையில் அனைத்து உணவகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தங்காலை, ஹேனகடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (31) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தங்காலையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆலமரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் போது காரில் 05 பேர் பயணித்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 29 மற்றும் 35 வயதுடைய ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். விபத்தில் காயமடைந்த கார் சாரதி மற்றும் ஏனைய இருவரும் தங்காலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “Wall Street Journal” ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் இந்த நாட்டுக்கு திரும்பினால் அரசியல் முரண்பாடுகள் உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மூன்று பில்லியன் டொரலர்களுக்கு மேல் இலங்கை தேட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த தொகை அடுத்த ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள், உணவு மற்றும் உரங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதி இரவு எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதன் அமைவாக இன்று(01) இரவு எரிபொருளின் விலை குறையலாம் என அறிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முற்பட்ட 50 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வென்னபுவ கடற்பரப்பில் வைத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.