நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் தோட்டத் தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கு வைத்திருந்ததாக கூறப்படும் காலாவதியான 200 கிலோ எடையுள்ள கோதுமை மா நானுஓயா சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் ஒன்றினைந்து தேயிலை தோட்டத்தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு அருகே இருந்து தோட்ட நிர்வாக அதிகாரிகளு்டன் முரண்பட்டில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நானுஓயா பொலிஸாருக்கும் , நானுஓயா சுகாதார பரிசோதருக்கும் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே தோட்ட களஞ்சியசாலையிலிருந்து 200 கிலோகிராம் கோதுமை மா மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த தோட்ட முகாமையாளர் குறிப்பிடுகையில் காலாவதியான கோதுமை மா இருந்தமை உண்மைதான் ஆனால் அவை தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யவில்லை , தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்த இடத்திலேயே இந்த நான்கு மூட்டைகள் அடங்கிய 200 கிலோ கோதுமை மாவினை வைத்திருந்தோம். தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒருமுறை வழங்கும் கோதுமை மா…
Author: admin
வெலிகம, பெலான பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்து, மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இன்று (03) பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம், வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது வெலிகம பெலான ரயில் கடவையில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முச்சக்கர வண்டியில் தாயுடன் 3 பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர். இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் வந்திருந்த 32 வயதுடைய உறவினர் ஒருவர் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 9 வயது குழந்தை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. ஏனைய இரண்டு பிள்ளைகள், தாய் மற்றும் மற்றுமொரு உறவினர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொல்வத்துமோதர கல்லூரியில் கல்வி…
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கைதுப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சிய பொறுப்பாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு வீதி ரோந்து கடமைக்காக வழங்கப்பட்டிருந்த கைதுப்பாக்கியை சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணிக்கு கடமையை முடித்துக்கொண்டு அந்த கைதுப்பாக்கியை ஆயுத களஞ்சி பொறுப்பாளரிடம் வழங்க முற்பட்டபோது தவறுதலாக கைதுப்பாக்கி வெடித்ததில் களஞ்சிய பொறுப்பாளரின் காலில் துப்பாக்கி சூடு பட்டு படுகாயமடைந்த அவர் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்ற 3,000 மாணவ மாணவியருக்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, இதற்காக நாடு முழுவதிலுமுள்ள 100 வலயக் காரியாலயங்களை உள்ளடக்கியதாக வலயமொன்றிற்கு 30 என்ற அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். புலமைபரிசில் வழங்களின் அடையாள ரீதியாக மேல் மாகாணத்தின் 11 கல்வி வலயங்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 110 மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் புலைமைப்பிரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன் கீழ் புலமைப்…
புதிதாக திருமணம் செய்து கொண்ட இளைஞன் ஒருவரை முன்னாள் காதலி வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று மதவாச்சியில் இடம்பெற்றுள்ளது. இவ்விருவரும் மதவாச்சி பகுதியிலுள்ள விடுதி அறையொன்றில் நேற்று முன்தினம் (1) தங்கியிருந்த போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளைஞனை அந்த யுவதி வெட்டியுள்ளார். அத்துடன், அந்த யுவதி அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு நோய்வாய்ப்பட்டுள்ளார். இவ்விருவரும் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகஹருவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன், பொலன்னறுவை செவணபிட்டிய பகுதியைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியுடன், மதவாச்சியில் விடுதியொன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காதலன் சில தினங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை தாமதமாக அறிந்து கொண்ட காதலி, அவரை சந்திக்க வந்த போது பையில் கத்தியை வைத்து எடுத்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. விடுதியின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள்…
2022ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் காசநோயால் பாதிக்கப்பட்ட 301 பேரில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அறியாமையாலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காததாலும், இந்த ஆண்டு முதல் சில மாதங்களிலும் இதே நிலையே காணப்படுகின்றது. சமூகத்தில் 4,000 முதல் 5,000 வரை கண்டறியப்படாத காசநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய் பற்றீரியா மூலம் பரவுகிறது. நோய்வாய்ப்பட்ட ஒருவர் இருமும் போது, பேசும்போது, தும்மும்போது, சிரிக்கும்போது, அது காற்றின் மூலம் ஆரோக்கியமான ஒருவருக்குப் பரவுகிறது.
இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 311.01 ரூபா மற்றும் 329.68 ரூபாவாக குறைவடைந்துள்ளது. கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 309.29 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை விற்பனை விலையானது மாறாமல் 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் முறையே 313 ரூபா மற்றும் 327 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். செலவு அடிப்படையிலான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் விலையை மறுஆய்வு செய்யவும், திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உயர்தரத்தைக் கொண்ட 2 ஆயிரத்து 952 பாடசாலைகள் உள்ள நிலையில், ஆயிரத்து 11 பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞானத் துறையில் கற்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற கோப் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் இந்த விடயத்தை தெரியப்படுத்திய அவர், ஆயிரத்து 941 பாடசாலைகளில் விஞ்ஞானத் துறையில் கற்பித்தல் இடம்பெறுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக பிரவேசத்தின் போது ஒரு சில பாடங்களுக்கு நடைமுறைப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்திய குழு, இதன் மூலம் அதிக Z புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியது. அந்தப் பாடங்களுக்கு உயர்தரப் பரீட்சையின் போதும் நடைமுறைப் பரீட்சை நடத்தப்பட்டு Z புள்ளிகள் வழங்கப்படுவதால் மேலும் நடைமுறைப் பரீட்சை அவசியமில்லை என வலியுறுத்தப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் உடனடியாக முடிவெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரைத்தது. அதேநேரம்,…
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் சில்லறை விலையில் மாற்றம் இல்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், அதிக எரிசக்தி தேவை, விநியோக சங்கிலி சிக்கல்கள் மற்றும் அரசியல் காரணமாக, உலக சந்தையில் எல்பி எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. உலகளாவிய விலை அதிகரித்துள்ள போதிலும், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் கணிசமான விலையில் லாஃப்ஸ் எரிவாயுவை வழங்கும். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, சந்தை நிலவரங்கள் அனுமதிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் அதற்கேற்ப விலைகளை மாற்றி அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது.