திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சாட்சிக் கூண்டில் ஏறிய சந்தேக நபர் ஒருவர் தனது கழுத்தை பிளேற்றினால் அறுத்து தற்கொலைக்கு செய்ய முயற்சித்த நிலையில் உயிர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (04) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல் துறையைச்சேர்ந்த யோகதாசன் லக்ஸன் வயது (25) என்பவர் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகி விளக்கமறியலில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவதினமான இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றிற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது சந்தேகநபர் நீதிமன்ற கூட்டில் எறிய நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த சேவிங் பிளேட்டினை திடீரென எடுத்து தற்கொலை செய்வதற்காக நீதவான் முன்னிலையில் தனது கழுத்தை அறுத்ததை அடுத்து படுகாயமடைந்துள்ளார். இதனை அடுத்து அங்கிருந்த பொலிஸார் உடனடியாக செயற்பட்டு…
Author: admin
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இன்றைய தினம் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவல் மற்றும் இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினமும் கொவிட் 19 தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்கள் குறிப்பாக வெளிப்புற அமைப்புகளில் இருக்கும்போது பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். தற்போது நோய் பரவும் அபாயம் இல்லையென்றாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைந்த அளவிலேயே இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது என்றார். பாரிய சோதனைகள் நடத்தப்படாததால், வைரஸ் பரவுவது குறித்து மிகத் தெளிவான படத்தைப் பெற முடியாது என்று உபுல் ரோஹன கூறினார், ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் பரவலாக உள்ளது என்று வலியுறுத்தினார். சுவாச மண்டலத்தை பாதிக்கும் இன்ஃப்ளூயன்ஸா நோய்களும் தற்போது அதிகமாக இருப்பதாக பொது சுகாதார…
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுதினமும் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களை ஒருவருக்கு போதுமான அளவில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதுளை – தெமோதரை 9 வளைவு பாலத்திற்கு அருகில் வைத்து, வெளிநாட்டு பயண வலைபதிவாளர்கள், இருவர் குளவி கொட்டுக்கு இலக்கான சம்பவம் பதிவாகியுள்ளது. அண்மையில் திருமணமான லீன் மற்றும் டான் ஆகியோரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இது தொடர்பான காணொளியையும் அவர்கள், தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில், லீன் என்பவரைத் தாக்கிய குளவிகளை அவரின் உடலில் இருந்து அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரி ஒருவரும், மற்றுமொருவரும் உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர்கள் சுமார் 15 குளவிகளை லீனின் உடலில் இருந்து அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை, சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாக மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் எமிரேட்ஸ் உடன்படிக்கையொன்றை இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. துபாயில் இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் எமிரேட்ஸ் பிரதம வர்த்தக அதிகாரி அட்னான் காசிம் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது எமிரேட்ஸ் தனது உலகளாவிய வலையமைப்பின் ஊடாக இலங்கையை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறுகையில், அழகிய கடற்கரைகள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் வளமான கலாசாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளில் இருந்து நாடு மீண்டு வருகிறது. மேலும் சுற்றுலாத் துறை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. எமிரேட்ஸ் உடனான கூட்டாண்மை, சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது மேலும் இது வரும் ஆண்டுகளில் அதிக…
கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்சம் ரூபா நிதி மோசடி செய்த இரண்டு பெண்கள் மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மன்னார் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர்கள் 23 மற்றும் 42 வயதுடைய யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். விகாரைகள், வெசாக் வலயங்கள் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் தொடர்பில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெசெக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த இரண்டு நாட்களிலும் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொதிகள் மற்றும் இனிப்புகளை ஒருவருக்கு மாத்திரம் போதுமான வகையில் வழங்குவதற்கு வாய்ப்பு…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது நிதியமைச்சரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பான நற்சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் (கடந்த 3ஆம் திகதி) இராஜாங்க அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது. அரசியலமைப்பின் 50வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் நாடு திரும்பும் வரை, 04-05-2023 முதல் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக செயற்படுவார்.
யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ. சிவ பாலசுந்தரன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாகவும் முச்சக்கர வாடகை வண்டி செலுத்துவோர் தொடர்பில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பிலும் தீர்மானம் எடுப்பதற்காக நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட முச்சக்கர வாடகை வண்டி சங்கத்தினர் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வர்த்தக சங்க பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிநிதி ,மற்றும் அதனுடன் இணைந்ததாக வட மாகாண போக்குவரத்து அதிகார…