பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க விசேட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து தற்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண தீர்மானித்து தொழில் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார். நியாயமற்ற வரிக் கொள்கையை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து விலகி மார்ச் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை 56 நாட்களுக்குப் பின்னர் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பது அரசியல் அதிகாரத்தின் அச்சுறுத்தல்களுக்கோ அல்லது அவர்களின் அதிகாரத்திற்கோ தலைவணங்கும் தொழிற்சங்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து செயல்படும் தொழிற்சங்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நபர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், அதன்படி செயற்படாவிட்டால்…
Author: admin
வெசாக் பண்டிகையுடன் இணைந்து மாணவர்களுக்கு அறநெறி (தம்ம) பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்குவது தொடர்பான அமைச்சரவை பாத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின் பிரகாரம், அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களை இனங்கண்டு, அவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு வழிநடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனிமனிதர்களிடையே பொறுமை, ஒழுக்கம், மதத்தின் மீது பற்று இல்லாமை போன்றவற்றால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து நல்வாழ்வு சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்துடன், அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் அறிவுத்திறனும் விருத்தி செய்யப்படவுள்ளதுடன், பிரசங்கம், தியானம் உள்ளிட்ட தம்மால் புரிந்துணர்வை பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் வழங்கவுள்ளனர். பிள்ளைகள் அறநெறி பாடசாலைக் கல்வியிலிருந்து விலகிச் செல்வதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்திருந்தார்.
மேன்முறையீடு செய்வதற்கான இறுதி திகதி 08.05.2023. முன்னர் விண்ணப்பிக்காதவர்களும் தற்போது மேன்முறையீடு செய்யலாம். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டுக்கான 06 ஆம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை இணையவழி (Online) மூலமாக சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இணையவழி ஊடாக விண்ணப்பங்களை https://g6application.moe.gov.lk/… என்ற இணையதளத்திற்குச் சென்று சமர்ப்பிக்கலாம்.
மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயற்சி. பாடசாலை மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை தன்னை சந்திக்க வேண்டும் என கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தை கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காததுடன், தந்தையை கட்டாயம் தன்னை சந்திக்க வேண்டும் எனவும்…
இலங்கை மக்களுக்கு இன்று இரவு சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும் இன்றிரவு 8.44 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வௌி ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார். நாளை (06) அதிகாலை 1.1 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடையும் எனவும் அவர் கூறினார்.
மானம்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் வங்கியில் வைப்புத் தொகையாக 20 இலட்சம் ரூபாவை எடுத்துச் செல்லும்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக மானாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மட்டம் I மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பதுளை மாவட்டத்தில் ஹாலி எல மற்றும் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தில் பத்தேகம மற்றும் யக்கலமுல்ல, கேகாலை மாவட்டத்தில் கேகாலை, மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல, மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட மற்றும் கொட்டபொல ஆகிய இடங்களுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வத்தேகம எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த சிசு வத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலைக்கு அடியில் சிசு ஒன்று காணப்படுவதனை அவதானித்த பிரதேசவாசிகள் அதனை எடுத்துச் சென்று வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் கூறினர். குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் குழந்தையை பிரசவித்த தாய் குறித்து அறிந்து கொள்ள வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியிலுள்ள வளைவொன்றில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து இன்று (5) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியினூடாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.