இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
Author: admin
ஈரான் அரசாங்கம் 1.8 மில்லியன் அமேரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகள் உட்பட இலங்கைக்கு உதவியாக வழங்கியது. இம்மருந்துப் பொருட்களை ஈரான் நாட்டுத்துாதுவர் ஹசாம் அஸ்ஜாசதா அவர்கள் சுகாதார அமைச்சில் வைத்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெலவிடம் கையளித்தனர். இவ் வைபவத்தில் சுகாதார அமைச்சர், இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடுகள் நிலவும் இக் காலகட்டத்தில் ஈரான் அன்பளிப்பாக வழங்கிய மருந்துப் பொருடகளுக்கு தனது நன்றிகளைத் ஈரான் துாதுவருக்கு தெரிவித்துக் கொண்டார்.
“இது மிகவும் பாரதூரமான நிலை, சட்ட அமலாக்கத்தால் மட்டுமே குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படமாட்டாது. இந்த பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. பெற்றோர்கள், பாதுகாவலர்கள் குறிப்பாக இளம் பெண்களுடன் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த வகையான நபர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பது குறித்து கவனமாக இருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்கலாம். துஷ்பிரயோகம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும், பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு அழைப்பதன் மூலமும் தகவல் வழங்க முடியும் என உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 24 மணி நேர தொலைபேசி இலக்கமான 1929 க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றம் இன்று(09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. அத்துடன் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் செஸ் வரி தொடர்பான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 09 கட்டளைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 03 ஒழுங்குவிதிகள் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பில் இன்று(09) விவாதிக்கப்படவுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவின் கூட்டம், இன்று(09) பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று, மே 09 ஆம் திகதி…
ஸ்ரீலங்கன் விமான சேவையை இந்தியாவின் ‘டாடா நிறுவனத்திடம்’ ஒப்படைப்பது தொடர்பில் அரசாங்கத் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுவான ‘டாடா நிறுவனம்’ ஏர் இந்தியா உட்பட பல விமான நிறுவனங்களின் வணிகத்தை நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீதும் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இலங்கையில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒன்று என்பதுடன், அந்த நிறுவனத்தை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை 06 ஆம் திகதி தாமரை கோபுரத்திற்கு 12,204 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த கோபுரம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் அதிகளவான பார்வையாளர்கள் வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கடந்தாண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட நிலையில் 815,982 பார்வையாளர்கள் இதனை பார்வையிட்டுள்ளனர். 13,057 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள பேக்கரிகளில் 75% க்கும் அதிகமான கோதுமை மாவை இலங்கையில் உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்வதாகவும், அந்த நிறுவனங்கள் தமது விலைகளை அதிகரித்தால் மாத்திரமே பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவினால் அனைத்து பேக்கரிகளுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.’ இலங்கையில் உள்ள இரண்டு நிறுவனங்களின் கோதுமை மா ஒரு கிலோ 210, 215 ரூபா என்ற விலையில் பேக்கரிகளுக்கு வழங்கப்படுவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் புகை மூட்டங்கள் சூழ்ந்துள்ளதால் சாரதிகளை மிகவும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கமைய கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் ஹட்டன் முதல் கித்துல்கலை வரையிலான, வட்டவளை, கினிகத்தேனை ஆகிய பகுதிகளிலேயே அடர்த்தியான புகை மூட்டங்கள் சூழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பகல் வேளையிலும் வாகனத்தின் மின் விளக்குகளை ஒளிரச் செய்து பயணிக்குமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணய தேசிய குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் இறுதி வாரத்தில் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கைக்காக இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தனது அவதானிப்புகளை உரிய தரப்பினருக்கு விரைவில் அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை ஏப்ரல் 11ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆர்வமுள்ள தரப்பினருக்கு இடைக்கால அறிக்கை ஏப்ரல் 27ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கையை தயாரிக்கும் போது முன்மொழிவுகள் கவனத்திற்க் கொள்ளப்படவுள்ளன. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 4,000 ஆக குறைக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டது.