அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு வியாபாரத்துக்காக 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை மகாஓயா நகர்பகுதியில் வைத்து நேற்று (11) மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் கடற்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான நேற்று மாலை மகாஓயா இலங்கை வங்கிக்கு அருகில் வீதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது பிபிலையில் இருந்து கஜமுத்துக்களை வியாபாரத்துக்காக மகாஓயாவிற்கு முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி வந்துள்ள நிலையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்து முச்சக்கரவண்டியை இடைமறித்து சோதனையிட்டபோது அதில் கடத்திக் கொண்டுவரப்பட்ட 5 கஜமுத்துக்களுடன் 3 பேரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் பிபிலையைச் சேர்ந்த 53,34,36,வயதுடையவர்கள் எனவும் இவர்களையும் மீட்கப்பட்ட கஜமுத்துக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும் மகாஓயா பொலிஸ் நிலையத்தில்…
Author: admin
போதை பொருளுக்கு எதிராக தீவக இளைஞர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீவக மறைக்கோட்டத்துக்கு உட்டபட்ட பங்குகளை சேர்நத இளைஞர்கள் வேலனை பிரதேசத்தில் போதை வஸ்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஒரு பிரிவினர் மண்கும்பான் சந்தியிலிருந்தும், இன்னொரு பிரிவினர் வங்கலாவடி சந்தியிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்து சாட்டி திருத்தலத்தை நோக்கி பாதாதைகளை ஏந்தி போதைப்பொருளுக்கெதிராக குரல் கொடுத்தார்கள். குறித்த போராட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார், தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி டேவிட் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொலிசார், உத்தியோகத்தர்கள் நலன் விரும்பிகள், இளையோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
காற்று மாசுபாட்டை அளவிடும் காற்றின் தர சுட்டெண் இன்று (12) காலை 10 மணி நிலவரப்படி, கம்பஹாவில் 161 ஆகவும் கண்டியில் 159 ஆகவும் பதிவாகியுள்ளது. சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியே செல்லும் போது முக்கவசம் அணிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இலகுவாக நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசின் முடிவைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் சுமார் 25 ஆயிரம் அரச ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளனர். பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார். பெருந்தொகையான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும் போதிய அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருப்பதால், அரச சேவையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 250 அரச வைத்தியர்களும் இம்மாத இறுதியில் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆயிரத்து 200 செவிலியர்கள் 60 வயதை எட்டியதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெற உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 34 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஓய்வுபெறவுள்ள சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படும் எனவும்…
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதகமான வரவு செலவுத் திட்டம் என்பதால் எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (11) பிற்பகல் அனுராதபுரம் விகாரைக்கு வருகைத்தந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்று பிற்பகல் அனுராதபுரம் வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதமஸ்தானாதிப பூஜ்ய பல்லேகம ஹேமரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச ஸ்ரீ மகா போதியை வணங்கி ஆசி பெற்றார்.
நிர்மாண கைத்தொழிலில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கடந்த ஒரு வருடத்திற்குள் சுமார் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், பொறியியலாளர் சஞ்ஜீவ ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் நிர்மாணத்துறை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை எழுத்துமூலம் தமது அதிகார சபைக்கு சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொமும்பில் பல பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விசேட பொலிஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய மருதானை, தெமட்டகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 பேர், 01 கிராம் மற்றும் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் மற்றும் 155 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 04 கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களும், கஞ்சாவுடன் கலக்கப்பட்ட 02 கிலோ 72 கிராம் மாவா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாளிகாவத்தை, மருதானை மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், சந்தேகநபர்களை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்…
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) A.R.Munsoor Foundationயின் ஏற்பாட்டில் எமது நாட்டின் பிரபல விரிவுரையாளர் S.L.M.நாஸிக் கலந்து கொண்டு தரம் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய பரீட்சையுடன் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இப் பௌண்டேசனின் தலைவி மரியம் நளிமுத்தீன் அவர்களின் ஆலோசனையின் பெயரில் கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் அதன் செயளாலர் மிப்ராஸ் மன்சூரின் தலைமையில் நடைபெற்றது இக் கருத்தரங்கில் 👉வினாக்களுக்கு விடையளிக்க முன் என்ன செய்ய வேண்டும்? 👉அதிக புள்ளிகளைப் பெறுவதற்கான வழிமுறை என்ன? 👉பரீட்சையை எதிர்கொள்வது எப்படி? இப்படி பல கேள்விகளுக்கான விடைகளோடு இவ் இலவச செயலமர்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் திடீரென உயிரிழக்கின்றமை காரணமாக, பொதுச் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.