உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ், பதவி காலம் 2024 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது. இருப்பினும் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆலோனை நடத்தினார். அதில், சர்வதேச நிதி நிறுவனமான ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.,வும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அஜெய் பங்கா ஐந்து ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கின்றன.
Author: admin
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு பணியாற்றிய தாதிகள் உட்பட பத்து ஊழியர்களின் DNA அறிக்கையை பெற நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல்.இளங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அரச இரசாயனையாளருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக அரசு மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பப்பட்ட வழக்குப்பொருட்களில் இரண்டு வெளிநாட்டு உயிரியல் மாதிரிகள் (டிஎன்ஏ) இருப்பதும் தெரியவந்துள்ளது. தினேஷ் ஷாப்டரின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட கேபிள், அவரின் கைகளை…
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி உரங்கள் கிடைப்பதற்கு வசதியாக ஆதரவை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணங்கியுள்ளது. இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும், இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவை உறுதிப்படுத்தும் வகையிலும் யூரியா மற்றும் எம்ஓபி உரங்களை வழங்கும் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (03) காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான யூரியா மற்றும் எம்ஓபி உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அடுத்த பருவகாலம் ஆரம்பிக்கும் முன்னர் இப்பணிகளை நிறைவு செய்து அடுத்த பருவத்தில் விவசாயிகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி உரங்களை வழங்கும் பணி ஒழுங்கை வெற்றியடைய செய்யும் நோக்கில் பணிகளை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
கொழும்பு பங்குச் சந்தை இன்று நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டுள்ளாதாக என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால் பங்குச் சந்தை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அத்தியாவசிய இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பிரிவு அதிகாரி நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளமையே இதற்குக் காரணம். எவ்வாறாயினும், ஒரு கிலோ கோதுமை மாவுக்கான 25 ரூபாவாக இருந்த வரி தற்போது 45 ரூபாவாக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த நாட்டிலும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 200 முதல் 205 ரூபாய் வரை உள்ளது. இதேவேளை, கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜெயவர்தன தெரிவித்திருந்தார்.
மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை, மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.00 மணி முதல் இன்று மாலை 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடு காலாவதியானதும் இதற்கு ஒரு காரணம். அதன்படி, தற்போது பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 230 ரூபாயாக இருந்தது. ஆனால் நேற்று ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 250 ரூபாவாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படாவிட்டாலும், சுமார் 2 மாதங்களுக்கு போதுமான சீனி தற்போது நாட்டில் உள்ளதாக, அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளில் இருந்தும் சீனி தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் என்றார்.
IMF உடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கு முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஒரு துறை பற்றி மட்டும் சிந்திக்கவில்லை எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார். இவ் வேளையில் அனைத்து அரச ஊழியர்கள் மீதும் பாரிய வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் பந்துல மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய பாண் உட்பட வெதுப்பக உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஒரு புறம் விலையை குறைத்து மறுபுறம் மூலப்பொருட்களின் விலையை அதிகரிக்கும் போது விலை குறைப்பது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய பாண் உட்பட வெதுப்பக உணவு பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது. அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களினால் எமது தொழிற்துறை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒருபுறம் விலையை குறைத்து மறுபுறம் கோதுமை மா, சீனி, முட்டை ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய எவ்வாறு பேக்கரி உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும். மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் எமது தொழிற்துறை…
நேற்றைய (03) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் பெரும்பாலும் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கி : நேற்றைய தினம் 311.01 ரூபாவாகவிருந்த டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 310.05 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.68 ரூபாவிலிருந்து 328.65 ரூபாவாக குறைந்துள்ளது.